நாம் ஏன் கற்றாழை ஜூஸை கட்டாயம் குடிக்க வேண்டும் என்று தெரியுமா?

கற்றாழையில் மட்டுமா நிறைய மருத்துவ குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.


மேலும் உடலின் மெட்டா பாலிசம் மற்றும் சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நம்மால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். இதனுடன் உடற்பயிற்சி மேற்கொள்வது இன்னும் நன்மை பயக்கும்.

இதில் ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் என்று எல்லா பண்புகளும் இந்த ஓரே பொருளில் ஒரு சேரக் கிடைக்கின்றன. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

நீங்கள் கற்றாழை ஜூஸை பருகினால் போதும் நமது உள்ளுறுப்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை எளிதாக சுத்தப்படுத்துகிறது. இதனால் நமது உடல் உறுப்புகளும் நன்றாக வேலை செய்கிறது. கற்றாழை ஜெல்லில் உள்ள பாலிசாக்ரைடுகள் மைக்ரோபேஜஸ் அதாவது இரத்த வெள்ளை உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதனால் நம்மால் எந்த நோயையும் எதிர்த்து போராட முடியும்.

கற்றாழை நமது உடலுக்கு தேவையான 8 முக்கியமான அமினோ அமிலங்களை கொண்டு இருக்கிறது. இந்த அமினோ அமிலங்கள் கிடைத்தால் போதும் நமது உடல் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் செயல்படும். வேகம் குறைந்த உடல் மெட்டா பாலிசத்தால் கொழுப்புகள் நம் உடலிலே தங்கி விடுகிறது. சாப்பிடும் உணவுகள் சரியாக சீரணிக்காமல் போகிறது.

ஆனால் இந்த கற்றாழை ஜெல்லில் உள்ள கால்சியம், மக்னீசியம், செலினியம் மற்றும் காப்பர் போன்ற தாதுக்கள் நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.