வேலம்மாள் கல்வி குழுமத்தில் ரெய்டு ஏன் தெரியுமா?

இரண்டாவது நாளாக சென்னை, மதுரை, கரூர் போன்ற பல்வேறு இடங்களில் கிளை பரப்பியிருக்கும் வேலம்மாள் கல்வி குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது


கடந்த சில ஆண்டுகளாக வேலம்மாள் கல்வி குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்ததாக வருமான வரித்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வேலம்மாள் கல்வி குழுமத்துக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இதுவரை கோடிக்கணக்கில் மதிப்பிலான நில ஆவணங்கள், ரொக்கப்பணம் அள்ளியிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் திடீரென இந்தக் குழுமத்தின் மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்ட காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் வேண்டப்பட்ட நிறுவனமாக வேலம்மால் கல்வி குழுமம் இருந்துவந்தது. அதன்பிறகு அவர்கள் இருவரிடமும் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த தேர்தலின்போது பணம் பட்டுவாடா விஷயத்தில் தினகரனுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக தகவல்கள் வெளிவந்தனவாம்.

அதனை பரிசோதனை செய்யவே இந்த ரெய்டு நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு அள்ளியிருக்கோம்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா.