ஸ்டாலின் மருமகளுக்கு நடிகர் கமல் கொடுத்த சாதனையாளர் விருது! எதற்கு தெரியுமா?

சென்னையில் நடைபெற்ற விழாவில் முக ஸ்டாலின் மருமகளும் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகாவுக்கு நடிகர் கமல் விருது கொடுத்து கவுரவித்தார்.


அமைதிக்கான நோபர் பரிசு வென்ற கைலாஷ் சத்தியார்த்தியின் வாழ்க்கை பயணத்தை மையமாக வைத்து ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தி பிரைஸ் ஆஃப் ப்ரீ என்கிற பெயரில் டெரக் டோனன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படம் சென்னையில் திரையிடப்பட்டது. இதற்கான விழாவில் கைலாஸ் சத்தியார்த்தி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சத்தியார்த்திக்கு மேடையில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டது. அதன்படி சினிமா மற்றும் சமூக சேவையில் பல்வேறு சாதனை படைத்ததாக கூறி கிருத்திகாவுக்கு நடிகர் கமல் கேடயம் மற்றும் விருது கொடுத்தார்.

அதாவது பெண் சாதனையாளர் என்கிற விருது கிருத்திகாவுக்கு கொடுக்கப்பட்டது. இவர் மு.க ஸ்டாலினின் மருமகள் ஆவார். ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து அரசியல் செய்து வரும் கமல் கையில் இருந்து கிருத்திகா இந்த விருதை பெற்றுள்ளார்.