ராகுல் காந்தி எதிர்பார்ப்பது யாருடைய ராஜினாமாவை தெரியுமா?

முடியவே முடியாது, நான் தலைவராக நீடிக்க முடியாது என்று உறுதியாக இருக்கிறார் ராகுல் காந்தி.


இந்த உறுதியைக் கண்டு ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் ஆடிப்போயிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், வழக்கமாக இப்படி ஸ்டன்ட் அடிக்கும் தலைவர்கள், அதன்பிறகு பதவியை பெற்றுக்கொள்வார்கள். ஆனால், ராகுல் உறுதியாக இருப்பதற்கு காரணம், செயல்படாத பல்வேறு காங்கிரஸ் தலைவர்களை பதவியில் இருந்து இறக்குவதற்குத்தானாம். இனி ராகுல் வழியில் அனைத்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலைமை ஏற்படும் என்கிறார்கள்.

இன்று நாடு முழுவதும் ராகுல் கடிதம் பெரும் எழுச்சியைக் கிளப்புகிறது. அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் வைரம் என்றுஅனைத்துக் கட்சியினரும் கொண்டாடுகிறார்கள். அந்தக் கடிதத்தின் ஒரே ஒரு பகுதி மட்டும் இங்கே...

"என்னுடைய போராட்டம் ஒருபோதும் வெறும் அரசியல் அதிகாரத்துக்கானது அல்ல. எனக்கு பாஜக மீது வெறுப்போ, கோபமோ இல்லை. ஆனால் என் உடலின் ஒவ்வொரு அணுவும் இயல்பூக்கமாகவே பாஜகவின் இந்தியா என்ற கருத்தை எதிர்க்கிறது. ஏன் இந்த எதிர்ப்பு எழுகிறது என்றால் என்னுடைய இருப்பே இந்தியன் என்ற கருத்தில் வியாபித்திருக்கிறது இது அவர்களுடைய கருத்துடன் நேரடியாகவே மோதல் கொள்கிறது.

இது ஒன்றும் புதிய போர் அல்ல. இந்த போர் நம் மண்ணில் ஆயிரமாண்டுகளாக நடத்தப்பட்டு வருவதுதான். எங்கு அவர்கள் வித்தியாசத்தைக் காண்கிறார்களோ நான் அங்கு ஒற்றுமையைக் காண்கிறேன். எங்கு அவர்கள் வெறுப்பைக் காண்கிறார்களோ நான் அன்பைக் காண்கிறேன். அவர்கள் எதைக் கண்டு பயப்படுகிறார்களோ நான் அதை ஆரத்தழுவுகிறேன்" என்று எழுதியிருக்கிறார் ராகுல்.

நாட்டுக்குத் தேவையான நல்ல தலைவர் என்று உறுதியாகவே கூறலாம்.