ஜெயலலிதா இருந்த காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், வேட்பாளர் அறிவிப்பு வெளியிடும் முதல் நபராக அவர்தான் இருப்பார். நிறுத்தி நிதானமாக தி.மு.க. வேட்பாளரை அறிவிக்கும். ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
விக்கிரவாண்டி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி யாருன்னு தெரியுமா? அ.தி.மு.க.வுக்கு வேட்பாளர் இவர் தான்!
தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. அவசரம் அவசரமாக விருப்ப மனு வாங்கி வேட்பாளரை அறிவித்து விடுகிறார்கள். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
66 வயதுக்காரரான புகழேந்தியை வேட்பாளராக அறிவித்ததும், உடனே ஸ்டாலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, தான் ஒரு தலைசிறந்த பகுத்தறிவுவாதி என்பதைக் காட்டியிருக்கிறார். அது சரி, யார் இந்த புகழேந்தி..?
1973-ல் தி.மு.க.வில் கிளை செயலாளராக அரசியலில் அடியெடுத்து வைத்தவர் நா.புகழேந்தி. இப்போது மாவட்ட பொருளாளராக இருக்கிறார். இப்படி சொல்வது முக்கியமல்ல, இவர் ஒரு வன்னியர். பொன்முடியின் தீவிர விசுவாசி. அதனால் பொன்முடியின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆக, வெற்றியோ தோல்வியோ, பொன்முடிதான் காரணம்.
தி.மு.க. வேட்பாளரை அறிவித்த நிலையில், அ.தி.மு..க. இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால், ஆள் முடிவாகிவிட்டது என்று சொல்லப்படுகிறது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு முத்தமிழ்செல்வனும், நாங்குநேரிக்கு கணேஷ்ராஜாவும் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை நம்பிய மனோஜ்பாண்டியனுக்கு அல்வா ரெடியாக இருக்கிறதாம்.