அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா? வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி!

இந்தியாவையே கட்டி ஆண்டுகொண்டு இருக்கிறார் மோடி. அவர் பேச்சுக்கு அமெரிக்காவும் சீனாவும் கட்டுப்படுகிறது. ஆனால், தமிழகம்தான் அவரைப் பார்க்கும்போதெல்லாம் கோ பேக் மோடி என்று கடுப்பேற்றி வருகிறது.


அதற்காகத்தான் தமிழ் மொழியில் பேசி, தமிழ் பாடல்களைச் சொல்லி, தமிழ் நாட்டுக்கு வந்து, தமிழன் உடை அணிந்து என்னென்னவோ செய்து பார்த்தாலும் தமிழர்கள் யாரும் கவிழ்வதாக இல்லை. அதனால் தமிழர்களை சமாளிப்பதற்கு நல்ல தலைவர் வேண்டும் என்று மோடி நினைக்கிறார்.

ஆனால், அப்படியொரு தலைவர் யாரும் இங்கே இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில் மோடியின் சமீபத்திய விசிட்டில் அடுத்த தலைவர் யார் என்பதற்கு விடை இருந்ததாக அவரது கட்சியினரே சொல்கிறார்கள்.

ஆம், மோடி இங்கே தங்கியிருந்த நேரத்தில் முக்கியப் பிரமுகர்களுக்கு ஒரு விருந்து நடைபெற்றது. அந்த விருந்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார் தெரியுமா? நம்ம வானதி சீனிவாசன். ஆக, அவர்தான் அடுத்த தலைவர் என்று மோடி முடிவு செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அதே நேரத்தில் விமானநிலையத்தில் வைத்து ஜி.கே.வாசனிடம் சீரியஸாகப் பேசிய மோடி, உடனே டெல்லிக்கு வரச்சொல்லி உத்தரவு போட்டார். அதனால் இவருக்கும் வாய்ப்பு இருப்பதாக் கருதப்படுகிறது. ஹெச்.ராஜா, பொன்னார், நயினார் ஆகியோர் இப்போது பயங்கர கடுப்பில் இருக்கிறார்களாம்.