தி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா? கனிமொழிக்கு செக் வைக்கும் உதயநிதி!

திடீரென கட்சிக்குள் நுழைந்து, இளைஞர் அணிச் செயலாளர் என்று உயர்ந்து இப்போது தி.மு.க.வின் அடுத்த தலைவராக வளர்ந்து நிற்பவர் உதயநிதி.


இப்போது நாட்டில் எங்கு தேர்தல் நடந்தாலும் தி.மு.க. சார்பில் பேசுவதற்கு ஸ்டாலினும், உதயநிதியும் மட்டுமே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சீனியர்கள் எல்லோரும் ஓரம் கட்டப்பட்டுவிட்டார்கள். 

இந்த செல்வாக்கு மட்டும் போதாது என்று உதயநிதிக்கு அடுத்த ஒரு தலைமை காத்திருக்கிறது. ஆம், தி.மு.க.வில் இளம் பெண்களுக்கு ஓர் அணி உருவாக இருக்கிறதாம். இன்றைய இளம் பெண்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க விரும்புவதில்லை. அதனால், இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் இளம் பெண்களுக்கு அ.தி.மு.க.வை போன்று ஓர் அணியை உருவாக்க இருக்கிறார்கள்.

மகளிர் அணி இப்போது கனிமொழி வசம் இருக்கிறது என்றாலும், அதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. இளைஞர் அணியைப் போன்று வலுவான அமைப்பு இல்லை. அதனால் அது டம்மிதான். அந்த இடத்தில் இளம் பெண்களை சேர்க்கக்கூடாது என்று தன்னுடைய இளைஞர் அமைப்பில் பெண்கள் அணியை உருவாக்க இருக்கிறாராம். இதன் மூலம் கனிமொழிக்கு கட்சியில் இருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையையும் காலி செய்கிறார்.

இளம் பெண்கள் அணிக்குத் தலைவியாக யாரை போடுவது என்பதில்தான் குடும்பத்தில் பெரிய பஞ்சாயத்தே நடக்கிறதாம். ஸ்டாலின் மகள் செந்தாமரை அந்தப் பதவிக்கு ஆசைப்படுகிறார். அதே நேரம் உதயநிதியின் மனைவி கிருத்திகாவுக்கும் ஆசை இருக்கிறதாம்.

இவர்களுக்கு ஆசை இருந்து என்ன பிரயோஜனம்? உதயநிதியின் எண்ணம் வேறு மாதிரி இருக்கிறது. யாராவது ஒரு நடிகையை தலைவியாகப் போட்டால் கட்சியின் வளர்ச்சி ஜிவ்வென்று இருக்கும் என்று நினைக்கிறாராம். 

அப்படி போடுங்க பாஸ்..!