ஆங்கிலோ இந்தியர்கள் யார் என்று தெரியுமா? சுவாரஸ்ய தகவல்!

இப்போது யூரேஷியர் என்று வகைப்படுத்தப்படும் ஆங்கிலோ இந்தியர்கள் என்கிற இனம் தோன்றி 300 வருடங்களுக்கு மேல் ஆகிறது.


கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக சென்னப்ப நாயக்கருடன் ஒப்பந்தம் போட பிரான்ஸிஸ் டே,ஆண்ட்டரூ கோகன் இருவரும் சென்னைக்கு வந்தது 1643 ஆகஸ்ட்டில்.அப்போதே,சென்னை சாந்தோமில் ஒரு போர்த்துக்கீசிய கலப்பினப் பெண்ணைச் சந்தித்ததாக பதிவு செய்திருக்கிறார்கள்.

அவள்தான் சென்னையின் முதல் யூரேஷியப் பெண்.முதல் சுதந்திரப்போர் நடந்த 1857 வரை இந்தியாவில் வெள்ளை இனப் பென்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி இருக்கிறது. 2000 ஆயிர வெள்ளை அதிகாரிகளும், போர் வீரர்கள்,மற்றும் பணியாளர்கள் என 40,000 வெள்ளையரும் இருந்த அன்றைய இந்தியாவில் பெண்கள் வெறும் ஐந்தாயிரம் பேர்தான் இருந்திருக்கிறார்கள்.

அன்றைய ஆங்கிலோ இந்தியர்களில் மூன்று வகை இருந்தது.பெற்றோர் இருவருமே ஆங்கிலேயர்களாக இருந்தாலும்,அவர்களுக்கு இந்தியாவில் பிறந்த பிள்ளைகளை ஆங்கிலோ இந்தியர் என்றே அழைத்திருக்கிறார்கள் அப்போது.அடுத்தது,அன்று இந்தியாவில் வாழ்ந்த பிரஞ்ச், டட்ச், டேனிஷ், போர்துகீஸ் இனத்தார் இடையே நடந்த இனக்கலப்பில் பிறந்தவர்கள்,

இந்திய தாய்க்கும் ஆங்கிலேயர்,உட்பட மற்ற ஐரோப்பியருக்கும் பிறந்த குழந்தைகளும் ஆங்கிலோ இந்தியர் என்றே அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை தருவதற்காக 1833ல் இங்கிலாந்து பார்லிமெண்டில் தனிச்சட்டமே கொண்டுவந்து இருக்கிறார்கள். பல்வேறு ஐரோப்பிய இனப் பெற்றோரைக் கொண்டிருந்தாலும் ஆங்கிலோ இந்தியர் அனைவரும் கிறிஸ்த்தவ மதத்தையே பின்பற்றினர்.இசை,நடனம்,உணவு,உடை எல்லாமே ஐரோப்பிய பாணிதான்.

சுதந்திரத்துக்குப் பிறகு இங்கிலாந்து ஆஸ்த்திரேலியா,கனடா போன்ற நாடுகளுக்கு பெரும் பகுதியினர் சென்றுவிட்டாலும் இந்தியாவெங்கும் 2 லட்சம் பேர் தங்கிவிட்டனர்.அதில் தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் பேர் இருந்திருக்கிறார்கள்.ராணுவம்,மருத்துவம்,ரயில்வே துறைகளில் அதிகம் பணியாற்றினாலும் விளையாட்டிலும் நிறைய ஆங்கிலோ இந்தியர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள்.

1900 ஆண்டில் பாரிசில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கக் கணக்கை துவக்கி வைத்த நார்மன் பிரிட்சர்ட்,1083ல் கிரிகெட் உலகக்கோப்பையை வென்ற கபிலின் அணியில் விளையாடிய ரோஜர் பின்னி,எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், ருத்யார்ட் கிப்ளிங்,ஜார்ஜ் ஆர்வெல்,ஹாலிவுட் நடிகை விவியன் லீ,முன்னால் உலக அழகி டயானா ஹைடன்,லாரா தத்தா,இன்றைய நடிகையும் பாடகியுமான ஆண்ரியா ஜெர்மையா,இசையமைப்பாளர் பால் ஜேக்கப் அனைவரும் ஆங்கிலோ இந்தியரே.

இங்கு வாழ்ந்த ஆங்கிலோ இந்தியர் ஐரோப்பிய உணவும் கலாச்சாரம் இசை போன்றவற்றை இங்கே பரப்பியது போல ஐரோப்பாவில் குடியேறியவர்கள் இந்திய பண்பாட்டை அங்கு பரப்பி இருக்கிறார்கள்.நம்ம ஊர் ரசம்,சட்னி போன்றவை லண்டன் மக்களை கவர்ந்திருக்கின்றன.

மேஜர் கிரேய்ஸ் சட்னி என்கிற ஒரு பிராண்ட் உருவாகி ஏற்றுமதிகூட நடந்திருக்கிறது. 1924ல் லண்டனில் நடந்த பொருட்காட்சியில் , இந்திய உணவுகளை அறிமுகம் செய்யும் பொறுப்பு எட்வர்ட் பால்மர் என்கிற ராணுவ அதிகாரியிடம் ஒப்படைக்கப் பட்டது.அதற்கு காரணம் ,இந்திய ராணுவத்தில் பணியாற்றிய எட்வர்டின் தாத்தா பால்மர் ஒரு இந்தியப் பெண்ணை மணந்தவர் என்பதே.

அந்தப் பெண்ணின் பெயர் வரலாற்றில் இடம் பெறாவிட்டாலும் அவள் பெயரின் பின்னொட்டான வீராசாமி என்பது நிலைத்து விட்டது.எட்வர்ட் பால்மரின் கம்பெனி பெயரே வீராசாமி அண்ட் கோ என்பதுதான்.எட்வர்ட் பால்மர் லண்டனின் வெஸ்ட் மினிஸ்ட்டர் பகுதியில் ,ரீஜெண்ட் தெரு கதவிலக்கம் 99-101ல் வீராசாமி என்கிற பெயரில் உணவகம் துவங்கினார்.

அதன் வாடிக்கையாளர் லிஸ்ட்டைப் பாருங்கள்,வின்ஸ்ட்டன் சர்ச்சில்,சார்லி சாப்ளின், இயன் சின்க்ளேர்,அப்துல் காதிர்,ஜவகர்லால் நேரு,இந்திராகாந்தி!.இவர்கள் எல்லோருமே வீராசாமி மகளின் கை பக்குவத்தில் உண்டாக்கப்பட்ட மிளகு தண்ணி,மெட்ராஸ் சிக்கன்,சிக்கன் ரோஸ்ட் மெட்ராஸ், ரவாகேசரியின் ரசிகர்கள்.