கான்டாக்ட் லென்ஸ் யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் மூக்குக் கண்ணாடிக்குப் பதிலாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. கான்டாக்ட் லென்ஸை முறையாகப் பராமரிக்கவில்லை என்றால் கண் பார்வை பறிபோகலாம் என்று பிரிட்டனில் உள்ள வெஸ்ட் ஸ்காட்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.


கான்டாக்ட் லென்ஸ் போடும் போதும் எடுக்கும்போதும் கை சுத்தமாக இருக்கவேண்டும். லென்ஸ்க்காக கொடுக்கப்பட்டிருக்கும் மருந்தால் கண்டிப்பாக கழுவவேண்டும். குளிக்கும்போதும் நீந்தும்போதும் கண்டிப்பாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தக்கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் அணிந்து சூரியனைப் பார்ப்பதையும், தூங்குவதையும் தவிர்க்க வேண்டும்கிருமிகளால் பாதிப்பு ஏற்பட்டு கண் எரிச்சல், கண் சிவத்தல், பார்வை குறைபாடு ஏற்படும்பட்சத்தில் உடனே மருத்துவரை சந்தித்து, பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுத்துக்கொள்ள வேண்டும்.