புற்று நோய்க்கு எதிராக எந்த மருந்து செயல்படுகிறது தெரியுமா?

வயிற்றில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் தினமும் ஆஸ்பிரின் மருந்தை எடுத்துக்கொண்டால், அவர்களுக்குப் புற்று நோய் வரும் ஆபத்து குறைகிறது என்று ‘தி லான்செட்’ என்ற மருத்துவ இதழ் தெரிவித்து உள்ளது.


* ஏற்கெனவே மாரடைப்பு அபாயம், ரத்த ஓட்டப் பிரச்னையைத் தீர்ப்பதில் ஆஸ்பிரின் சிறந்த முறையில் செயல் புரிவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வயிற்றுப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து ஆஸ்பிரின் மருந்து கொடுத்து வந்ததில், அவர்களுக்குப் புற்று நோய் வரும் வாய்ப்பு 60 சதவிகிதம் குறைந்தது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது பல்வேறு பக்கவிளைவுகளையும் ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.