அனுமன், சிவபெருமான் போன்ற கடவுள்கள் என்ன ஜாதி தெரியுமா? பா.ஜ.க. தலைவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

சிவபெருமான் நம்ம ஜாதிதான்,பீஹார் அமைச்சர் அசத்தல்!


கடவுள்கள் என்ன ஜாதி என்பது குறித்து பிஜேபி தலைவர்கள் தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அனுமன் ஒரு தலித் என்றார் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அதை எதிர்த்து ராஜஸ்தான் சர்வ பிராமண மகாசபாவின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா தொடர்ந்த வழக்கு இப்போது நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் பீகார் பிஜேபியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும்,ஆளும் நிதீஷ் குமார் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவருமான பிரிஜ் கிஷோர் பிந்த் சிவன் தனது பிந்த் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்து இருக்கிறார்.

தனது பிந்த் ஜாதி பீஹார் மக்கள் தொகையில் 14% இருப்பதாகவும்,ஆனால் முதல்வரின் இரண்டு சதவீத ஜாதி தம் மக்களை ஆளுவ்தாக பேசிய அமைச்சர் சிவனே அவர் பிறந்த பிந்த் சாதியைச் சேர்ந்தவர்தான் என்று முதல்வர் காலை வாருவதாக நினைத்து கடவுளின் காலையும் வாரி விட்டு இருக்கிறார் அமைச்சர்.

பீகாரின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டு இருக்கும் பாகு சவுகானுக்கு பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று பாரட்டு விழா நடந்தது.கவர்னர் சவுகானுடன் பீகார் துணை முதல்வர் சுஷீல் குமாரும் அப்போது மேடையில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் அமைச்சரின் பேச்சு அதிர்ச்சிதான்.

மேடையில் இருந்து இறங்கிய அமைச்சர் பிரிஜ் கிஷோரைச் சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்க்ல்ள் இது குறித்து கேள்வி எழப்ப,நான் சிவபுராணத்தில் இருப்பதைத்தான் பேசினேன்.' என்றவர், சிவ புராணத்தை எழுதியது வித்யா.

வித்யாதர் மகராஜ் என்கிற வரலாற்று அறிஞர் என்று அடுத்த வெடியை வீசிய அமச்சர்,சிவ புராணத்தில்தான் சிவன் பிந்த் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றார்.அதோடு,ராமர் சத்திரியர்,கிருஷ்ணன் யாதவர் , அப்படி இருக்கும்போது,சிவன் ஏன் ஒரு பிந்த் ஆக இருக்கக் கூடாது என்றும் கேட்டிருக்கிறார்.