வங்கியில் எஃப்.டி. போடப் போறீங்களா? எந்த வங்கியில் அதிக வட்டி என்பதை தெரிஞ்சுக்கோங்க!

வங்கி நிலையான வைப்புத் தொகைக்கு (எஃப்.டி) அதிகப்படியான வட்டி வழங்கும் வங்கிகள்.


நிலையான டெபாசிட் (எஃப்.டி) என்பது நாம் கடினமாக சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கான மிகவும் பொதுவான நிதி வழிகாட்டியாகும். 

வங்கிகளின் எஃப்.டிக்கள் மக்களிடையே மிகவும் விருப்பமான முதலீடாக கருதப்படுகிறது, ஏனெனில் இது பரஸ்பர நிதிகளின் முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. 

வணிக வங்கிகளுடன் ஒப்பிடும்போது, ​​சிறு நிதி வங்கிகளின் எஃப்.டி.கள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறார்கள். "ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி" மற்றும் "உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி" ஆகியவை நிலையான வைப்புத் தொகைக்கான முதிர்வுகளுக்கு 9% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் தற்போதைய வட்டி விகிதங்கள். 7 நாட்கள் முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, ஃபின்கேர் சிறு நிதி வங்கி 4% வட்டி அளிக்கிறது. 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை, 6%, 181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை, 7% வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மேலும்.12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் மற்றும் 15 மாதங்கள் 1 நாள் முதல் 18 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, இந்த வங்கி முறையே 8% மற்றும் 8.25% வட்டி அளிக்கிறது. 24 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 9% வட்டி வழங்குகிறது.

"உத்கர்ஷ் சிறு நிதி வங்கியின்" சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள். 271 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக முதிர்ச்சியடையும் வைப்புத்தொகைக்கு 7.50% வட்டி விகிதமும்.

1 ஆண்டு முதல் 455 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 8.50% வட்டி வழங்குகிறது இந்த வங்கி. மேலும் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் 456 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புத்தொகைக்கு மிக உயர்ந்த வட்டி விகிதமாக 9% வட்டியை வழங்குகிறது.

வங்கிகளின் வைப்புத் தொகைக்கு அதிகப்படியான வட்டி விகிதங்களை வழங்கும் முதல் 5 வங்கிகளின் நிலையான வைப்புத் தொகைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கான நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தில் ஐடிஎஃப்சி வங்கி 8 சதவிகிதமும். ஆர்பிஎல் வங்கி 7.6 சதவிகிதமும். லக்ஷ்மி விலாஸ் வங்கி 7.5 சதவிகிதமும். இந்தஸ் இந்த் வங்கி மற்றும் யெஸ் வங்கி முறையே 7.25 சதவிகித வட்டியை வழங்குகின்றன.

FDயில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள், நீங்கள் FDயில் முதலீடு செய்யும் காலத்தைப் பொறுத்து மற்றும் அதே காலத்திற்கு FD க்கான வட்டி வங்கிக்கு வங்கி மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூத்த குடிமக்களுக்கு பொதுவாக அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. வட்டியைத் திரும்பப் பெற பெற, நீங்கள் ஆண்டுக்கு ஒருமுறையாகவோ.அல்லது ஆறு மாதங்கள் மூன்று மாதங்கள் மற்றும் மாதா மாதம் என வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விருப்பம் போல வட்டி பெறும் முறையைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

நிலையான வைப்புத் தொகையைப் பொறுத்தவரை FDயில் பெறப்படும் வட்டிக்கு. முதலீட்டாளர்களுக்கு வருமான வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய வரிச் சட்டங்களின்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் வட்டி ரூ .10,000 மேல் தாண்டினால், டி.டி.எஸ் வங்கியால் கழிக்கப் படுகிறது.

டி.டி.எஸ்ஸைத் தவிர்ப்பதற்கு, வாடிக்கையாளர்கள் படிவம் 15 ஜி அல்லது படிவம் 15 எச் போன்றவற்றை வங்கியில் சமர்ப்பித்து டி.டி.எஸ்ஸை தவிர்க்கலாம்.

மணியன் கலியமூர்த்தி