கொரானோ வந்தால் என்னாகும் தெரியுமா? படிக்காமல் விட்றாதீங்க ப்ளீஸ்.

எங்கோ, யாருக்கோ கொரோனா வருகிறது என்ற அலட்சியம்தான் பலரிடம் உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்தால், என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? கெளதமனின் எச்சரிக்கை இது.


நம் வீட்டில் யாருக்கேனும் கொரோனாவால். ஒருவேளை உடல் நலப்பிரச்னை ஏற்பட்டால், அரசு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்படியான நிலைமை உண்டானால், அவர்களோடு கூட துணைக்குச் செல்ல நம் ஒருவருக்கும் அனுமதி கிடையாது.

நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று அவர்களின் கைகளைப் பிடித்து ஆதரவாகப் பேசமுடியாது. விஸிட்டிங் நேரத்தில் கூடப் போய் பார்த்தோமா, தேறுதல் சொன்னோமா என்றெல்லாம் கனவு கூடக் காணமுடியாது.

குரூரமான உண்மை என்ன தெரியுமா..? படுத்திருப்பவரைச் சுற்றி ஒரு தெரிந்த முகம் கூட இருக்காது. பல நோயாளிகளுடன் போராடி முற்றிலும் சோர்வடைந்த நர்ஸுகள், டாக்டர்களுக்கு மத்தியில் பகலா இரவா என்றுகூட தெரியாமல், வெண்டிலேட்டர்களின் மூலம் மூச்சு விட்டுக் கொண்டு, நோய் கடுமையாகி இறப்பதற்கோ, குணமாகி வீட்டிற்குத் திரும்புவதற்கோ காத்துக் கொண்டிருக்க வேண்டும்

இதில் வெண்டிலேட்டர் வைத்துக் கொள்ள அந்த வசதி கிடைத்தால் கிடைத்தவர் பெரிய அதிர்ஷ்டசாலி. ஏனெனில் அந்த அளவு வெண்டிலேட்டர் இருக்கிறதா, கிடைக்குமா என்பதே சந்தேகம். 

யாருக்கும் போன் செய்து நோயாளி எப்படி இருக்கிறார் என்று நம்மால் விசாரிக்கக் கூட முடியாது. ஏனெனில், நம் கேள்விகளுக்கு பதில்சொல்ல அங்கு யாருக்கும் நேரமும் கிடையாது. பொறுமையும் கிடையாது. 

ஹாஸ்பிடலில் படுத்திருக்கும் நேரம் முழுவதும் வெறும் தனிமை மட்டும். படுத்திருப்பவர் நினைவின்றி இருந்தாலும் காத்திருக்கும் நமக்கு ஒவ்வொரு நிமிடம் போவது ஒரு யுகமாய் இருக்கும். 

ஒருவேளை படுத்திருப்பவர் நாமாக இருந்தால்.,அனைத்தையும் தன்னந்தனியாக, துணையின்றி கடந்து வர வேண்டும். நம் கையைப் பிடித்துக் கொள்ள எந்த அம்மா அப்பாவோ, பெண், பிள்ளையோ கிடையாது முடியவேயில்லை என்று முனகி.. முகம் பார்த்து கண்ணோரம் கண்ணீர்விட ஒருவருமே அருகில் இருக்க மாட்டார்கள்.  

நினைத்துப் பார்க்கவே எந்த அளவு கர்ண கடூரமாக இருக்கிறது . தயவு செய்து வீட்டில் இருங்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் புரிய வையுங்கள். அடுத்த ஒருவாரம் மிகவும் முக்கியமான வாரம்..! இந்த வாரத்தைக் கடந்துவிட்டால்.. அதன் பிறகு மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் இதன் குரூரமான நிஜத்தைச் சொல்லி புரியவையுங்கள் என்று எழுதியிருக்கிறார் கெளதமன்.