பால் விலை ஏறுவதால் என்னவெல்லாம் நடக்கப்போகிறது தெரியுமா? அதிர்ச்சி கட்டுரை!

பொருளாதார தாக்குதல். வேலை இழப்பு என.! உயர்ந்துவிட்ட விலைவாசிகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில்..


தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையான பால்‌ விலையை ஏற்றி மிகப்பெரிய சூறாவளி தாக்குதலை தொடுத்துள்ளது தொடுத்துள்ளது தமிழக அரசு. ஆம். வரும் திங்கள் கிழமை முதல் தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் விலை லிட்டருக்கு முறையே 4 மற்றும் 6 ரூபாய்கள் உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில்  2014ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கு பிறகு. ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசின் பால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது .

சில வருடங்களாகவே பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையில் பால் விலையை கடந்த பிப்ரவரி மாதத்தில் தனியார் நிறுவனங்கள் உயர்த்தியது. 

அதன் பிறகு ஆரோக்யா, ஹெரிட்டேஜ் நிறுவனங்களின் பால் விலை கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் மீண்டும் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.கொள்முதல் செலவுகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கூலி ஆகியவற்றின் காரணமாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனங்கள் தெரிவித்திருந்தது.

கடந்த மாதம் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலை  உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில். தற்போது இந்த விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 

பால் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு என்பது போல. இந்தியாவில் அரிசி முதன்மையான உணவுகளில் ஒன்று.  ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல்  முதியவர் வரை எல்லோருக்குமான உணவாக வலம் வருகிறது பால்.  

தேநீர், காபி. தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்ற பல பொருட்களின் மூலமாக இருப்பது பால். சென்னை மாநகர வாசிகள் அதிகாலையில் எழுந்து சூடாக தேநீரோ, காஃபியோ குடித்துக்கொண்டு தினசரி பேப்பர்களை படிப்பதில் ஒருவித சுகம் காண்பார்கள். 

பல பேருக்கு காலையில் தேநீரோ காஃபியோ அருந்தினால்தான் அவர்கள் அடுத்த பணிகளுக்கு ஆயத்தமாவார்கள் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த பால் விலை உயர்வு சென்னை மட்டுமல்லாது நாட்டின் அனைத்து மக்களின் தலையிலும் இடியாக விழுந்துள்ளது.

6 ரூபாய் விலை ஏற்றினால் அவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுமா? என்று ஆராய்ந்தால்.. 2011 ஆண்டு கணக்குப்படி 7.5 கோடி மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில். கிட்டத்தட்ட 98 % பேர் அதாவது 7.35 கோடி மக்கள்  பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிக்கும் தினசரி வாடிக்கையாளராக உள்ளனர்.

சென்னையில் மட்டும் ஆவின்  நிறுவனத்தில் மூலம் ஒரு நாளைக்கு 12 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது என்று குறிப்பிடுகிறது ஆவின் நிறுவனத்தின்  அறிக்கை. 

அப்படிப்பார்த்தால் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 73 லட்சம் ரூபாய் சென்னை மக்களின் தலையில் சுமத்தப்படுகிறது இந்த விலை உயர்வு . சராசரியாக ஆண்டுக்கு 276  கோடியே 37 லட்சம் ரூபாய் இந்த விலை உயர்வின் மூலம் ஒரு  பொருளாதார சுமையை மக்களின் தலையில் சுமத்தியுள்ளது. இது சென்னை வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள தொகை மட்டுமே.  

2019 ஜனவரி கணக்கின்படி. சென்னை மாநகருக்கு தினமும் 12 லட்சத்து 30 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்டுகள் சென்னையில் மட்டும் 100 லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 22 லட்சம் லிட்டர் பால் நேரடியாக  தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மூலமாக என மொத்தம்  33 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது.

2017 -18 ஆண்டு 5478 கோடி அளவிற்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கிறது ஆவின் .  இந்த நிறுவனத்தில் சுமார் 5448 நிரந்தர பணியாளர்கள் மூலமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களைக் கொண்டு 

இப்போது தமிழகத்தில் ஆரோக்கியா, திருமலா, ஜெசி, டோட்லா, ஹெரிட்டேஜ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 12 லட்சம் லிட்டர் தனியார் பால் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. 6000 முகவர்கள் தனியாரிடம் இருந்து பாலை வாங்கி பொதுமக்களுக்கு வினியோகம் செய்கிறார்கள்.

தனியார் பால் பெரும்பாலும் உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. ஏற்கனவே. சென்னை போன்ற மாநகரங்களில் ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பலதரப்பட்ட பகுதி மக்கள் புகார்கள் அளித்தும்.

இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற ஒரு பரவலான குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதற்கிடையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த பால் விலை உயர்வு சொல்லொணாத் துயரில் ஆழ்ந்துள்ள மக்களின் வாழ்க்கையில் இடி மேல் பேரிடியாக விழுந்துள்ளது.

கர்நாடக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நந்தினி பால் லிட்டருக்கு 19 ரூபாய் விலையில் விற்பனை செய்வது  குறிப்பிடத்தக்கது.

மணியன் கலியமூர்த்தி