ஜாதி விவகாரத்தில் பெரியார் என்ன சொன்னார் தெரியுமா?

மதம், சாதி போன்ற விவகாரங்கள் ஒழியவேண்டும் என்று கடைசி நொடி வரை போராடியவர் தந்தை பெரியார். அவர் ஜாதி பற்றி என்ன சொன்னார் தெரியுமா?


"நீங்கள் ஏன் கீழ் ஜாதி என்று உங்களையே கேள்வி கேளுங்கள். கடவுள் காரணம் என்று தோன்றினால் உடனே அந்தக் கடவுளைத் தூள்தூளாக்கி உடைத்தெரியுங்கள். மதக் கட்டளை என்று தோன்றினால். அம்மதத்தைச் சின்னாபின்ன மாக்குங்கள் அல்லது அரசாட்சி முறை என்று கண்டால் அதை அழித்திடுங்கள் அல்லது மனிதர்களு டைய சூழ்ச்சி சுயநலப் பித்து என்று தோன்றினால் தைரியமாய் அவர்களிடம் இனிமேல் இந்தப் புரட்டு நடக்காது என்று சொல்லுங்கள்." 

'நமக்குத் தாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே அடிமை மனப்பான்மைக்கு அஸ்திவாரம் என்றும், நமக்குக் கீழ் ஒருவரில்லை என்று உண்மையாய் நினைப்போமானால் நமக்கு மேலாக ஒருவன் இருக்கவேமாட்டான்.

கருமபலன் தத்துவத்தில் நம்மைவிட ஒரு விதத்திலும் மேலான யோக்கியரல்லாதவர்களும், கீழ் மக்களும் நமது இரத்தத்தை உறிஞ்சியே ஜீவனம் செய்ய வேண்டியவர்களும், நமக்கு மேலான ஜாதியாரென்றும் அவர்களை வணங்க வேண்டியது நமது மோட்ச சாதனமென்றும் நினைக்கும்படி செய்துவிட்டது. இக்குறைகள் நீங்கின நிலைதான் சமத்துவமென்பதும், சமூக முன்னேற்றமென்பதும் என்பதாக நான் நினைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.