ஹாலிவுட் சூப்பர் டைரக்டர் ஸ்டான்லி ஸ்பெஷல் என்ன தெரியுமா? ஸ்பீல்பெர்க் இவரோட ரசிகராம்!

இறந்து இருபது வருடமாகிறது ஆனாலும் குப்ரிக் இன்னும் பேசப்படும் இயக்குநராக இருக்கிறார்.


உலகில் எந்த மொழியிலும் , யாரும் இவரளவுக்கு வெரைட்டியான வெற்றிப் படங்களை கொடுத்ததில்லை.போர்,அரசியல் அங்கதம்,சைன்ஸ்ஃபிக்‌ஷன்,நவீன இலக்கியம்,சரித்திரம்,திரில்லர் என்று எல்லா ஜானர்களிலும் சாதித்தவர் குப்ரிக்.கிழக்கு ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய யூத குடும்பத்தில் பிறந்த குப்ரிக் வளர்ந்தது நியூயார்க்கில்.லுக் பத்திரிகையின் போட்டோ கிராஃபராக வாழ்க்கையை துவக்கிய ஸ்டான்லி குப்ரிக் ஹாலிவுட்டில் கால்பதித்து உலகின் கவனத்தை ஈர்த்த படம் 2000 ஸ்பேஸ் ஓடசி,இதுதான் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்கின் ஆதர்ச சினிமா.

அமெரிக்கா வியட்நாம் போரில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவர் எடுத்த 'புல் மெட்டல் ஜாக்கெட்' 70 களில் அமெரிக்க மக்களின் இதயம் கவர்ந்த படமாக இருந்தது.அடுத்தது ஐம் ஸ்பார்டக்ஸ் என்கிற ரோமானிய சரித்திரப் பிண்ணணியில் வந்த வரலாற்று காவியம்.அவரது கடைசிப் படம் 'ஐஸ் வைட் ஷட்'!அந்தப் படத்தில் மாணிக்கம் யோகேஸ்வரன் பாடிய  தமிழ் பாடல் இடம் பெற்றது.இப்படி படத்துக்கு படம் புதுமைகள் செய்த குப்ரிக் அன்றைய அமெரிக்க சூப்பர் ஸ்டார்களுடன் தொடர்ந்து மோதியவர்

அவர்.கிர்க் டக்ளஸ் ,மார்லண்ட் பிராண்டோ துவங்கி இன்றைய டாம் க்ரூய்ஸ் வரை பல நடிகர்களை படுத்தி எடுத்தவர்.அப்போது கடுப்பானாலும் பத்திரிகைகளின் பாராட்டுகளும் ரசிகர்களின் கைதட்டலும் அவர்களை குப்ரிக்கின் பின்னால் அலைய வைதன.டாக்டர் ஸ்ட்ரேஞ் லவ் படத்தைப் பார்த்த அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அவரது ரசிகரானது தனிக்கதை.

இப்படி ஆரம்பம் முதலே அதிரடிக்காரராக இருந்த குப்ரிக்கை அவரது சம்காலத்தவரை விட பின்னால் வந்தவர்கள் இப்போதும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு அருங்காட்சியகம் அமைத்திருக்கிறார்கள்.அவர் பெயரின் வலிமைகுறித்து படமொன்றுகூட எடுத்திருக்கிறார்கள்.இத்தனை சிறப்புகள் கொண்ட ஸ்டான்லி குப்ரிக்கின்  பிறந்தநாள் நாளை!