மருத்துவரால் முன்பே தீர்மானிக்கப்படும் சிசேரியன் என்றால் என்னன்னு தெரியுமா? யாருக்குன்னு தெரியுமா?

மனிதனை தவிர அனைத்து உயிரினங்களும் இயற்கையாகவே தங்கள் இனத்தை விருத்தி செய்கின்றன. அனைத்து உயிரினங்களும் பிரசவத்திற்கு வேறு ஒரு துணையை நாடுவதில்லை. மனித குலத்தில் மட்டும்தான் சுகப் பிரசவம் சில நேரங்களில் சிக்கலாகிறது.


கர்ப்பிணியின் இடுப்பு எலும்பின் சுற்றளவு மிக்ச்சிறியதாக இருக்கும்பட்சத்தில் குழந்தையால் எளிதில் வெளிவர முடியாமல் போகும். நான்கு கிலோவுக்கு அதிகமான எடை உள்ள குழந்தையால் செர்விக்ஸ் வழியே வெளியேறுவது மிகவும் சிரமமாக இருக்கும்.

எடை அதிகமுள்ள குழந்தை வெளியே வருவதற்காக முட்டும்போது தலையும் மூளையும் பாதிக்கப்படலாம் என்பதால் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.குழந்தை வெளியேறும் செர்விக்ஸ் போதிய அளவுக்கு சுருங்கி விரியும் தன்மை இன்றி காணப்பட்டால், குழந்தை வெளியேற முடியாது என்பதாலும் சிசேரியன் முன்கூட்டியே முடிவு செய்யப்படும்.

பொதுவாகவே சுகப்பிரசவத்திறகு வழியில்லாத சூழல் உருவாகும் பட்சத்தில் மட்டுமே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள். சிசேரியன் அல்லது சி-செக்ஷன் வேறு எப்படிப்பட்ட சூழலில் மேற்கொள்ளப்படும் என்பதை இனி பார்க்கலாம்