நீங்கள் உபயோகபடுத்தும் வாசனை திரவியதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்னென்ன தீமைகள் என்று தெரியுமா?

ஒவ்வொரு நாளும் நமது சருமத்தில் டியோட்ரன்ட் அல்லது வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது நமது சரும ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும்.


சுவாசப் பிரச்சினைகள்: டியோட்ரன்ட் அல்லது வாசனை திரவியத்தில் உள்ள ரசாயனங்கள் அல்சைமர் உண்டாக்க கூடும். மேலும், இந்த ரசாயனம் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. வலுவான வாசனையின் காரணமாக, அவை நாசி இழைகளையும் சேதப்படுத்தும், இதனால் உங்களுக்கு சுவாச பிரச்சினைகள் உண்டாகலாம்.

ஹார்மோன்கள் சமநிலையற்றவையாகின்றன: டியோட்ரன்ட் மற்றும் வாசனை திரவியங்களில் உள்ள சில இரசாயனங்கள் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, ஆரோக்கியத்தை மோசமாக்கும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் அழகையும் பாதிக்கிறது.

வியர்த்தல் செயல்முறை தடைப்படுகிறது: ஒரு ஆராய்ச்சியின் படி, வியர்வையைக் குறைக்கப் பயன்படும் நறுமணப் பொருட்கள், வியர்வையின் இயல்பான செயல்முறையைத் தடுக்கின்றன, இது உடலில் ஆர்சனிக், காட்மியம், ஈயம் மற்றும் பாதரசம் போன்ற கூறுகள் குவிவதற்கு வழிவகுக்கும். வியர்வை உடல் நாற்றத்தை அகற்ற பயன்படும், வாசனை திரவியங்கள் மற்றும் தியோ வியர்வை சுரப்பியை பாதிப்பது மட்டுமல்லாமல் உடல் நச்சுத்தன்மையின் சாதாரண செயல்முறையையும் சேதப்படுத்தும்.