தமிழில் சிறந்த திரைப்படமாக தேர்வான பாரம் படத்தின் கதை என்ன தெரியுமா? அதிரவைக்கும் தலைக்கூத்தல் கலாசாரம்!

பரியேறும் பெருமாள் படமே இந்த ஆண்டின் சிறந்த தமிழ்படமாக தேர்வு செய்யப்படும் என்று எண்ணப்பட்ட நேரத்தில், பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளியான பாரம் படம், அந்த விருதை தட்டிச் சென்றுள்ளது.


இந்தப் படத்தை தயாரித்து, இயக்கம் செய்துள்ள பிரியா கிருஷ்ணசாமி அடிப்படையில் ஒரு சினிமா எடிட்டர் ஆவார். ஏற்கெனவே கங்கோபாய் என்ற டாக்குமென்டரிக்காக பல விருதுகள் பெற்றவர். இந்தப் படமும் முதலில் ஒரு டாக்குமென்டரியாக எடுக்க முடிவு செய்து, அதன் பின்னரே திரைப்படமாக எடுத்துள்ளார்.

கருப்பசாமி இரவு காவலாளியாக வேலை செய்கிறார். தங்கை வீட்டில் தங்கியிருக்கும் அவருக்கு உறவென்று சொல்லிக்கொள்ள பெரிதாக யாரும் இல்லை. திடீரென ஒரு நாள் விபத்தில் சிக்கி இடுப்பெழும்பு உடைந்து விடுகிறது. கிராமத்தில் இருக்கும் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று பார்ப்பதற்கு யாரும் இல்லை.

கிராமத்து மருத்துவரால் அவரது பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை. மரண வேதனையில் இருக்கும் கருப்பசாமியின் வாழ்க்கையை தலைக்கூத்தல் என்ற பழைய கலாசார முறைப்படி முடிவுக்கு கொண்டுவர நினைக்கிறார்கள். அதை செய்தார்களா என்பதுதான் அதிர்ச்சி தரும் கதை.

நியாயமான தேர்வு என்கிறார்கள்.