ரஜினிகாந்துக்கு 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..? வாயைப் பிளக்காம படிங்க

தேர்தலுக்கு முன்பு திடீரென நரேந்திரமோடியின் வீடியோ வெளியானது. மேன் வெசஸ் வைல்ட் நிகழ்ச்சியில், அந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ்சுடன் தோன்றி, வன உயிர் பாதுகாப்பு பற்றி பேசினார் மோடி.


இப்போது அதே நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இரண்டு முக்கியப் பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆம், ஒருவர் நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்தவர் பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

800 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த பந்திபூர் வனப்பகுதி செழிப்பான, அடர்த்தியான, நீண்ட காடுகளைக்கொண்டது. நாகூர், கபினி மற்றும் மோயார் போன்ற ஆறுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த வனவிலங்கு பூங்காவின் எல்லா மூலைகளிலிருந்தும் பயணிகள் உள்ளே போய் சகலரும் பார்த்து ரசிக்கலாம். 

இந்த வனவிலங்கு பூங்காவில் புலிகள், நான்கு கொம்பு மான், ராட்சத அணில், யானை, அரிவாள் மூக்கன், காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமை போன்ற விலங்குகள் இருக்கின்றன. மேலும், பழுப்பு மூக்கு ஆந்தை, தூக்கணாங்குருவி, மரங்கொத்தி, மீன் கொத்தி போன்றவற்றுடன் பலவகைக்குருவிகள் மற்றும் பூச்சிப்பிடிப்பான் பறவைகளும் இங்கு நிறைந்துள்ளன. 

இதுதவிர இங்கு அரிய தாவர இனங்களையும் கொண்டுள்ளது. இவற்றில் தேக்கு, நெல்லி, மூங்கில், கருங்காலி, சந்தனமரம், நாவல் மரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இங்குதான் ரஜினியும் அக்ஷய் குமாரும் தங்கள் நடிப்பைத் தொடரப் போகிறார்கள். இரண்டு நாள் படப்படிப்புக்காக இருவருக்கும் தலா 1 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெவிக்கப்படுகின்றன.

அடேங்கப்பா, தேர்தலுக்கு பணம் சேர்க்கிறாரோ..?