தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் மீன் விலை! காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் கடல் உணவு பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.


வங்க கடலில் மீன் பிடி தடை காலம் அமலில் உள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழகத்தில் மீன் வரத்து கடுமையாக குறைந்துள்ளது. கேரளாவில் இருந்து வரும் மீன்களால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் ஏரி, ஆற்று மீன்களின் தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. 

ஃபானி புயல் கரையை கடந்த பிறகு தான் மீன் வரத்து அதிகமாகி விலை குறையும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். அதுவரை மீன் பிரியர்கள் தங்கள் நாக்கை கட்டிப்போட வேண்டியது தான்.