குருவாயூர் கோவில் துலாபாரத்தில் மோடி! தாமரைப்பூ என்ன விலை தெரியுமா?

நரேந்திரமோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதும் முதல் வேலையாக வாரணாசி போய்வந்தார். அடுத்து ஒரே ஒரு சீட் கூட ஜெயிக்காத கேரளாவுக்குப் போனார்.


கேரளாவுக்கு என்றதும், அங்கே மக்கள் குறை தீர்க்கப் போகவில்லை, அவரது வேண்டுகோளை நிறைவேற்றப் போனார்.ஆம், மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்துவிட்டால் எடைக்கு எடை பூ தருவதாக மோடி வேண்டிக்கொண்டாராம். அதன்படி கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் துலாபாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. அவருடைய எடைக்கு எடை தாமரைப் பூ வைக்கப்பட்டது. இதில் விவகாரம் என்னவென்றால், அந்த தாமரைப் பூ என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பதில்தான்.

ஆம், இந்த தாமரைகளை வாங்க நான்கு பேர் கொண்ட நாலு டீம் அமைக்கப் பட்டதாம்.. மொத்த செலவு எம்புட்டு தெரியுமா? 36 லடசம் என்று தகவல். 36 லட்ச ரூபாய்க்கு எவ்வளவோ இட்லி வாங்கலாம், எவ்வளவு தோசை வாங்கலாம்னு கணக்குப் போடாதீங்க. அடுத்து திருப்பதி கோயிலுக்குப் போயிருக்கிறார். அடுத்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறாராம். ஆம், காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கும் அத்திவரதர் நிகழ்ச்சியில் மோடி பங்கெடுக்க இருக்கிறாராம்.

இனிமே மோடியை கூப்பிடணும்னா நலத்திட்ட உதவி எதுவும் வேண்டியதில்லை, மோடி ஜெயிச்சா கோயில்ல தங்கரதம் இழுக்கிறதா வேண்டிக்கிட்டோம்னு சொன்னா போதும், மோடி ஓடி வந்திடுவார் என்று காங்கிரஸ்காரர்கள் கிண்டல் அடிக்கிறாங்கப்பா….