கோடைக்கு மாமருந்து வெள்ளரிக்காய் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

கோடை காலத்தில் மட்டுமே நாம் காணும் வெள்ளரிக்காய்க்கு கோடை எரிச்சலைத் தணிக்கும் தன்மை உண்டு. நீர்ச்சத்து நிறந்த வெள்ளரிக்காயை நறுக்கி கண்ணின் மேல் வைத்துக் கொண்டால் கண் எரிச்சல் உடனே போகும்.


 வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி முகத்தில் தேய்த்தால், கரும் புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவை மறைந்து சருமம் பளபளப்பாகும். வெள்ளரிக்காயை அப்படியே கடித்து சாப்பிடுவது மிகுந்த நன்மை தரக்கூடியது.

வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, தயிரில் போட்டு அத்துடன் பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து குளிர் சாதன பெட்டியில் வைத்து பிறகு ஜில்லென்று ஒரு கப் சாப்பிட்டால் வெய்யிலால் வரும் தாகம், சோர்வு களைப்பு நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.