சுவர்ப்பு சுவையின் மகிமை தெரியுமா? நரம்புக்கு பலமேற்றும் சுவை இதுதான் !!

துவர்ப்பு சுவையை ஒரு சுவையாகவே எவரும் விரும்புவதில்லை. அதனால் இந்த சுவையை விரும்பி எவரும் சமைப்பதும் சாப்பிடுவதும் கிடையாது.


வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய்களில் கிடைக்கும் துவர்ப்புச் சுவை ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. வியர்வையைக் கட்டுப்படுத்தி, ரத்தப்போக்கினைக் குறைக்கவல்லது. வயிற்றுப்போக்கை சரி செய்கிறது. இது அதிகமானால் வாத நோய்கள் உண்டாகிறது.  துவர்ப்பு சுவையின் மருத்துவப் பயன்கள் பற்றி விரிவாக அறிந்துகொள்வோம்.

நாம் உண்ணும் உணவில் அதிகளவு துவர்ப்புச் சுவை இருக்க வேண்டும். துவர்ப்புச் சுவை உடலில் அதிக அளவில் சேர்வதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். அதேபோன்று மலச்சிக்கல் நோயின் ஆரம்ப அறிகுறி என்கின்றனர் மருத்துவர்கள். மலச்சிக்கலை போக்கினாலே நோய்களின் கோரப் பிடியின்றி நாம் வாழலாம்.

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் துவர்ப்புத் தன்மை அதிகம் சேர்ந்திருந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். இதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதனால் ஜீரண சக்தி அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும் தன்மையை அறிந்து அவற்றைப் பயன்படுத்தினர்.

துவர்ப்புச் சுவைக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உண்டு.  மேலும் சிறுநீரகத்தில் படிந்திருக்கும் உப்புப் படிவங்களை கரைப்பதும் துவர்ப்பு சுவையே. துவர்ப்பு வியர்வை பெருக்கியாக உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்ற இந்த துவர்ப்பு பயன்படுகிறது.

பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை உண்டாகும். இந்த பித்த அதிகரிப்பை குறைக்கும் தன்மை துவர்ப்புச் சுவைக்கு உண்டு. இன்றைய நவீன காலத்தில் உணவு என்பது ஏதோ உயிர்வாழ என்று நினைத்து அவசர கதியில் தயாரித்த உணவுகளை சாப்பிட்டு அவசர அவசரமாக சென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அதனால் அபானவாயு சீற்றமாகி குடலில் புண்களை ஏற்படுத்திவிடும். இவர்கள் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

அதிக மன அழுத்தம், வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்பு தளர்வு உண்டாகிறது. இதனால் இளம் வயதிலேயே சிலர் வயதான தோற்றத்திற்கு ஆளாகின்றனர். இந்த நரம்புத் தளர்வை நீக்கும் குணம் துவர்ப்பு சுவைக்கு உண்டு.

இரத்தக் கொதிப்பால் ஏற்படும் இருதய நோய்களை குறைக்க துவர்ப்பு சுவை மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான அளவு துவர்ப்புச் சுவை கிடைப்பதால் இரத்தக் கொதிப்பு குறையும்.

துவர்ப்பு சுவை நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். தினமும் நாம் சாப்பிடும் உணவில் துவர்ப்புச் சுவைகொண்ட பொருட்களை அதிகம் சேர்ப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

இயற்கையாகவே மூலிகைகள், காய்கள், கனிகளில் உள்ள விதைகள், தோல் முதலியவை துவர்ப்பு சுவை கொண்டவை. எந்த ஒரு சுவை உள்ள உணவுகளை சாப்பிட்டாலும் அதற்கு மாற்று மருந்தாக துவர்ப்புச் சுவை உள்ள பொருட்களை சாப்பிடுவது நல்லது.

உதாரணமாக திராட்சையில் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை உண்டு. ஆனால் அதன் மேல் உள்ள தோலும், உள்ளே உள்ள விதைகளும் துவர்ப்புச் சுவை உடையவை.  துவர்ப்புச் சுவை மற்ற சுவைகளினால் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். எனவே தினமும் துவர்ப்புச் சுவையுள்ள உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.