டயனோசர் காலத்தில் நாடுகள் எல்லாம் எப்படி இருந்தது தெரியுமா? பூமியின் வரலாற்றை திரும்பிப் பாருங்கள்!

இந்த பூமியில் அத்தனை நாடுகளும் ஒன்றாகத்தான் இருந்தது என்கிறார் விஞ்ஞானி க.பொன்முடி. இதோ அவர் கூறும் காரணங்களைப் பாருங்கள்.


பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறை அடுக்குகளாக உருவாகும் பொழுது,அதில் இருந்து பிரியும் நீரானது,சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்கு மேலே வந்ததால்...கடல் உருவானது. நீரில் உருவாகும் பனிக் கட்டியானது நீர்ப்பரப்பில் மேல் மிதப்பதை போன்று...

பாறைக் குழம்பில் இருந்து, நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான பாறைத்த தட்டையானது,பாறைக்கு குழம்பை விட அடர்த்தி குறைந்ததாக இருப்பதால்,பாறைக் குழம்பில் மேற்பரப்பில் மிதக்கத் துவங்கியதால் கண்டங்கள் உருவாகின. கண்டங்கள் எல்லாம் கண்டங்களை சுற்றி இருக்கும் கடல் தளத்துடன் கண்டத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,

அவ்வாறு நகரும் பொழுது கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் உருவாகுவதாகவும்,ஒரு கண்டத் தட்டுக்கு அடியில் அடுத்த கண்டத் தட்டையானது திடீரென்று உரசிச் செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட வரை படத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்க வில்லை.அதே போன்று வட அமெ ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்க வில்லை.

இதன் மூலம்,கடல்தரையானது தொடர்ச்சியாகவும்,நிலையாகவும் இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்களும்,மரங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.எனவே டைனோசர்களின் காலத்தில்,

கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும், அதன் வழியாக டைனோசர்கள் அண்டார்க்டிக்கா ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே டைனோசர்களின் புதை படிவங்களானது அண்டார்க்டிக்கா ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பிறகு தனித் தனியாகப் பிரிந்து கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கமாகும்.

இந்த நிலையில்.எரிமலைகளுக்குள் நுழையும் பாறைக் குழம்பால் எரிமலைகள் உயர்ந்த பிறகு அதில் இருந்து வெளியேறும் வாயுக்களால் எரிமலைகள் இறங்கும் பொழுது,எரிமலையுடன் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால் எரிமலையைச் சுற்றி ,வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.

இதே போன்று...நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.குறிப்பாக சுமத்ரா ,ஹைத்தி மற்றும் ஹோன்சூ தீவுகளில் சுனாமி ஏற்பட்ட பொழுது,

நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.எனவே பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புக்களால்,சுமத்ரா ,ஹைத்தி மற்றும் ஹோன்சூ தீவுகளில் , நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது, படிப் படியாகக் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்குள் உருவாகி மேற்பரப்புக்கு வரும் சூடு நீர் ஊற்று நீரால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாலும் கடலின் பரப்பளவானது அதிகரித்துக் கொண்டு இருப்பதாலும் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் படிப் படியாகக் குளிர்ந்து கொண்டு இருக்கிறது.