பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி எப்படி அகற்றப்படும் என்று தெரியுமா?

கருவில் உள்ள குழந்தைகளுக்கு பெரியவர்கள் போன்று நுரையீரல் மூலம் ஆக்சிஜன் எடுத்துக்கொள்ள முடியாது என்பதால், அந்த வேலையை தொப்புள் கொடி செய்கிறது. பிரசவம் வரை மட்டுமே தொப்புள் கொடி மூலம் குழந்தை ஆக்சிஜன் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், ஊட்டங்களை பெற்றுக்கொள்ள முடியும்.


·         பிரசவம் நிகழ்ந்ததும் இந்த தொப்புள் கொடியின் மீது நச்சு அருகிலும், குழந்தையின் தொப்புள் அருகிலுமாக இரண்டு கிளிப்கள் போடப்பட்டு ரத்தவோட்டம் நிறுத்தப்படுகிறது.

·         இதனால் குழந்தையின் நுரையீரல் வேலை செய்வதற்கு தூண்டப்படும், அதேபோல் தனக்குத் தேவையான ஊட்டச்சத்தை தாயிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் குழந்தை தள்ளப்படும்.

·         கிளிப் போடுவதற்குள், தொப்புள் கொடியில் உள்ள ரத்தம் தானாகவே குழந்தையின் உடலில் சென்று சேர்ந்துவிடுகிறது. தொப்புள் கொடியில் இருக்கும் அரிய ஸ்டெம்செல்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு நல்லது என கருதப்படுகிறது.

·         இந்த தொப்புள் கொடி ரத்தத்தை பாதுகாத்து வைக்கும் கார்டு பிளட் பேங்கிங் வெளிநாடுகளில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. வளர்ந்தபிறகு தோன்றும் நோய்களில் இருந்து, இந்த ரத்தம் மூலம் காப்பாற்றமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

இன்னமும் இந்த நடைமுறை நம் நாட்டில் பிரபலமடையவில்லை என்பதால் முழுமையான ரத்தத்தையும் குழந்தையின் உடலுக்குள் செலுத்திய பிறகு நச்சுக்கொடி அகற்றப்பட வேண்டும். இப்போது தாயிடம் இருந்து குழந்தை முழுமையாக பிரிந்து தனியே வாழும் தகுதியை பெற்றுவிட்டது. இதுவரை நார்மல் டெலிவரி பற்றி பார்த்தோம். அடுத்து நாம், வேறு வகையான பிரசவ முறைகளை பார்க்கலாம்.