ஆரோக்கியம் சொல்லும் நகத்தை எப்படி கவனிக்கணும் தெரியும?

நகங்களுக்கு பாலீஸ் போடுவதற்கு ஆசைப்படும் பெண்கள் கூட, நகத்தைப் பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துவது இல்லை. நகமும் நம் உடலின் ஒரு உறுப்பு என்பதை உணர்ந்து அதனை பாதுகாக்க வேண்டியது அவசியம்.


* இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் நகங்கள் விரைவில் உடைந்துவிடும். அதனால் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளான சோயா, பீன்ஸ், அவரைக்காய், பச்சைக் கீரை, பேரிட்சை, மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றை போதிய அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* வைட்டமின் டி நிரம்பிய பீட்ரூட் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு நகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கும்.

* கால்சியம் நிரம்பிய பால் போன்ற பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது நகங்கள் பளபளப்புடன் திகழும்.

நகங்களை சூடான நீரில் சுத்தம் செய்து ஆலீவ் ஆயில் அல்லது எலுமிச்சை சாறு தேய்த்து மசாஜ் செய்வது நல்ல பலன் தரும். நகங்களை முறையாக வெட்டவில்லை என்றால் விரிசல்கள், வெடிப்புகள் ஏற்பட்டுவிடலாம்.