முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை கிடைத்தது எவ்வளவு தெரியுமா..? உண்டியல் பணம் கொடுத்த மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரின் அறிக்கை இதோ.


மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 14.5.2020 அன்று வரை மொத்தம் 367 கோடியே 5 லட்சத்து 38 ஆயிரத்து 343 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் 5 கோடி ரூபாய். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஊழியர்கள் 2 கோடியே 53 லட்சத்து 70 ஆயிரத்து 748 ரூபாய். The Hon’ble Portfolio Judge for AG & OT, the Hon’ble Mr.Justice R. Subbiah - 1 கோடியே 86 ஆயிரத்து 639 ரூபாய், ரிஜிஸ்டார் ஜென்ரல், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம், 1 கோடியே 50 லட்சத்து 31 ஆயிரத்து 750 ரூபாய், ஆக்வாசாப் என்ஜினியரிங் 1 கோடியே 50 ஆயிரம் ரூபாய், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பணியாளர்கள் 90 லட்சத்து 29 ஆயிரத்து 763 ரூபாய் என ஒட்டுமொத்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 21.7.2020 முடிய முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் ஆகும். இந்நிலையில், கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. தமிழ்ச் செல்வன் என்பவரின் மகன் செல்வன் நரேந்திரன் மற்றும் அவரது மகள் செல்வி நிரஞ்சனா ஆகிய இருவரும் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாயை, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள் மற்றும் வறுமையில் வாடும் சிறுவர்களுக்கு 40 நாட்களுக்கு உணவு பொருட்கள் வழங்கியுள்ளனர். 

மேலும், சென்னை, அசோக் நகர், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி செல்வி னு.லக்ஷா என்பவர் தான் சேமித்து வைத்திருந்த சேமிப்பு பணம் 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நோய்த் தடுப்பு நிவாரணப் பணிக்காக, முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு வழங்கியுள்ளார். 

இந்த சிறிய வயதில், தன்னலம் பாராமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பிறர் நலம் பேணும், மாணவச்செல்வங்களின் செயலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மனதார பாராட்டியுள்ளார். மேலும், ஐ.டி.சி நிறுவனம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வசிக்கும் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சுமார் 1.59 கோடி ரூபாய் செலவில், தேவையான உணவு பொருட்கள், ரேசன் பொருட்கள், சேனிடைசர் மற்றும் பொது மருத்துவமனை மருத்துவர்களுக்கு உணவு ஆகியவற்றை வழங்கிய ஐ.டி.சி நிறுவனத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.                                                                           

மேற்கண்ட நாட்களில் நிவாரண நிதி அளித்த நிறுவனங்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.