இட ஒதுக்கீட்டு தீர்ப்பில் இருக்கும் ஆபத்துகளை பற்றி தெரியுமா..? உஷாராக இல்லையென்றால், மீண்டும் சிக்கலாம்..

இடஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை பல கட்சிகளும் வரவேற்றுள்ள நிலையில், எழிலன் நாகரத்தினம் அதில் இருக்கும் ஆபத்துகளை சுட்டிக் காட்டி இருக்கிறார். உஷாராக இல்லையென்றால், மீண்டும் சிக்கல் வரும் என்கிறார்.


உயர் நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோர் இடஓதுக்கீடு தீர்ப்பு முழுமையாக படித்தேன்.. கவனிக்க வேண்டியவை 

1.இந்த வருடம் நடைமுறைப்படுத்த முடியாது அடுத்த வருடம் தான். (ஏன் இந்த வருடம் நடத்தினால் யார் தேய்ந்து போவார்கள்)

2.அடுத்த வருடம் நடைமுறை படுத்த மூன்று மாதங்களில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டுமாம். (இன்னோரு கமிட்டியா ?)

3.அந்த கமிட்டியில் மத்திய அரசு .. மத்திய அரசின் அதிகாரிகள் மனிதவள துறை, சுகாதார துறை, இந்திய மருத்துவ கழகம் (mci-(medical council of India கலைக்கப்பட்டது என்று உயர் நீதிமன்றத்திற்கு தெரியாதா ? இப்போது இந்திய மருத்துவ ஆனையம் ) பிறகு தமிழ் நாடு அரசு சுகாதார துறை செயலாளர் அமர வேண்டுமாம்.

இந்த கமிட்டி அமர்ந்து பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அளவுக்கோல் எப்படி இருக்க வேண்டும் மத்திய அரசு கூறிய வரையறைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் (அது எப்படி முடியும் ? அனைத்து இந்திய மருத்துவ இடங்களில்  

10% ews upper caste plus 22% sc/st plus 27%obc - total = 59% 

அப்போ 27% OBC இடஓதுக்கீடு கொடுத்தாலே ... மத்திய அரசு வரையறை தாண்டுகிறது 

அப்போது 50% பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கொடுத்தால் total =82% 

82% அளவுக்கோல் கொடுக்குமா மத்திய அரசு ? மத்திய அதிகார வர்க்கம் சரியில்லை என்பதால் தான் நீதிமன்றத்தில் வழக்கு.. மறுபடியும் அவர்களிடமே போய் கமிட்டி அமைக்க சொல்கிறது உயர் நீதிமன்றம். அதனால், உஷாராக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். சரியான எச்சரிக்கைதான்.