என் எள்ளுப் பாட்டி கடலூர் கார தமிழ்ப் பெண்மணி! உலகப் பெரும் கோடீஸ்வரர் வெளியிட்ட டிஎன்ஏ தகவல்!

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மூதாதையர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதை மரபணு சோதனை செய்து தெளிவுபடுத்தியுள்ளார்.


பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் பிரிட்டனில் சொந்தமாக பிரிட்டன் அட்லாண்டிக் என்ற விமான சேவையை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கு தனது பரம்பரை குறித்து தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்துள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் தனது முதியவர்களிடம் பல்வேறு குறிப்புகளை கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

அவர்கள் கூறியதையடுத்து தனது எள்ளுப் பாட்டி இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த அவர் அதை உறுதி செய்வதற்காக மரபணு சோதனை செய்துள்ளார். அப்போது அவரது உடம்பிலும் இந்தியர்களின் ரத்தம் போடுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது எள்ளு தாத்தா இந்தியாவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்டம் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 11ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் எனது பரம்பரை இந்தியாவைச் சேர்ந்தது என்பதை மரபணு சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கூறியதாவது 1973 ஆம் ஆண்டிலிருந்து நான்கு தலைமுறைகளாக இந்தியாவில் தான் வசித்து வந்துள்ளனர் என்பதையும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேலும் பல தகவல்களை சேகரித்த ரிச்சர்ட் பழங்காலத்தில் எடுக்கப்பட்ட தனது பாட்டியின் புகைப்படம் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர்களது நினைவு காரணமாக அந்த புகைப்படத்தை பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானத்தில் பொக்கிஷமாக வைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.