பாஜக பத்திரிகை துக்ளக்கின் அதிரடி கருத்து கணிப்பு! அதிர்ச்சியில் எடப்பாடி! ஆனந்தத்தில் ஸ்டாலின்!

சோ நடத்திவந்த துக்ளக் பத்திரிகையை இப்போது ஆடிட்டர் குருமூர்த்தி நடத்திவருகிறார். மோடிக்கு நெருக்கம் போன்று காட்டிக்கொள்பவர். அ.தி.மு.க. ஆட்சியை ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்துவதற்கு அடித்தளம் போட்டுக்கொடுத்தவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.


அவர் நடத்திவரும் துக்ளக் பத்திரிகையில், இந்த இதழில் தொகுதிகளுக்கு ரவுண்ட் அடித்து தெரிவிக்கும் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தி.மு.க.வுக்கு அளவுக்கு அதிக தொகுதிகளை அள்ளிக் கொடுத்திருப்பதைக் கண்டு அதிர்ந்து நிற்கிறது அ.தி.மு.க.


அப்படி எத்தனை தொகுதிகள் கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? * பா.ஜ.க.வை சேர்ந்த தமிழிசை தூத்துக்குடியில் தோற்றுப்போவார் கனிமொழி வெல்வார் என்று சந்தோஷமாக தெரிவித்திருக்கிறார்கள்.


இதுதவிர, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராம்நாடு, திண்டுக்கல், பொள்ளாச்சி, கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர்,ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகியவை எல்லாமே தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சேலம், தேனி, கன்னியாகுமரியிலும் தி.மு.க.கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


இன்னமும் சென்னை மற்றும் டெல்டா பகுதிகள் கணக்கீடு செய்யப்படவில்லை. அதாவது தொகுதி ரவுண்டப் சென்ற 25 தொகுதிகளில் 15 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்குப் போகிறது என்று தெரிவிக்கிறது. அப்படியென்றால் சென்னை பகுதியில் எப்படியிருக்கும் என்பதை சொல்லவே வேண்டாம்.


பா.ஜ.க. ஆதரவு பத்திரிகையே இப்படி சொல்லலாமா, பிறகு எப்படி மக்கள் நமக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று அ.தி.மு.க.வினர் டென்ஷன் ஆகிறார்கள். அட, உள்ளதைச் சொன்னேன் என்கிறாராம் குருமூர்த்தி.