களம் இறங்கிய உதயநிதி! ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி அசத்தல்! திமுக சார்பில் தூர்வாறும் பணிகள் மும்முரம்!

திமுக இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கட்சியை பலப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளார். முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனைக்கு முடிவு கட்ட குளங்கள் தூர்வாரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி நாரணமங்கலத்தில் திருவாசல்குளம் தூர்வாரும் பணியினை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் “தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை பாதுகாக்க ஏரி, குளங்களை தூர்வாரும் பணியில் திமுக ஈடுபடுத்தி கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனேவே மதுரையில் கண்மாய் குளத்தை தூர்வாரியதாகவும், தற்போது திருவாரூரில் உள்ள இந்த குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இது மட்டுமின்றி அடுத்த கட்டமாக திருக்குவளையில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி ஸ்டாலின். 

தமிழகம் முழுவதும் குளங்களை தூர் வாருவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணியின் அந்த பணியினை சிறப்பாக செய்து முடிப்பார்கள் என பேட்டியளித்தார். மேலும் திமுகவுக்கு அதிக உறுப்பினர் சேர்க்கும் வகையில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கோடு அதற்கான பணிகளை செப்டம்பர் 14-ந் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்தார் உதயநிதி. 30 லட்சம் இலக்கு என்றாலும் அதற்கு மேலும் உறுப்பினர் சேர்க்கை இருக்கும் என தீர்க்கமாக நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.