பீகாரில் எதிர்க்கட்சிகளின் தோல்வியைப் பார்த்து மிரளும் தி.மு.க… காரணம் என்ன தெரியுமா?

பீகாரில் எதிர்க்கட்சியாக இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம்தான் வென்று ஆட்சிக்கு வரும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெள்ளத் தெளிவாக கூறிவந்தன. இதற்கு காரணங்களும் தெளிவாகவே கூறின.


அதாவது மத்திய பா.ஜக.வுக்கு எதிர்ப்பலையும் ஆளும் நிதிஷ் கட்சி மீது கோபமும் மக்களுக்கு இருப்பதாக சுட்டிக் காட்டினார்கள். இந்த தகவல் தி.மு.க.வுக்கு அல்வா போல இனித்தது. ஏனென்றால், தமிழகத்திலும் அதே சூழல் நிலவுவதாக நம்பியது.

ஆனால், நடந்ததோ வேறு. பா.ஜ.க. மெகா பாய்ச்சலில் பாய்ந்து வெற்றியைத் தொட்டுள்ளது. மீண்டும் அதே ஆட்சி நடக்கப் போகிறது. தேஜஸ்விக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்த காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19-ல் மட்டுமே வென்றிருக்கிறது.

அப்படியென்றால், அடுத்து தமிழகத்திலும் இதே நிலைமைதான் திரும்ப போகிறதா, நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை இல்லையா என்ற கவலையில் இருக்கிறது தி.மு.க. மேலும், காங்கிரஸ் கட்சியின் நிலையும் ஸ்டாலினுக்கு பெரும் கவலையை ஊட்டியுள்ளது.

பிரசாந்த் கிஷோர் இதற்காக என்ன திட்டத்தை தொடங்கச் சொல்லப் போகிறாரோ என்ற கவலையில்தான் தி.மு.க.வினர் இருக்கிறார்கள்.  a