எ.வ வேலுவுக்கு திமுகவில் உயர் பதவி! தலைமை நிலையச் செயலாளர் ஆகிறார்!

பஸ் கண்டக்டராக இருந்து பெரிய மனிதராக உயர்ந்தது இரண்டே பேர்தான். ஒருவர் ரஜினிகாந்த். அடுத்தது தி.மு.க. பெரும்புள்ளி எ.வ.வேலு. இப்போது தி.மு.க.வில் ஏதேனும் செலவு என்றால் அதனை செய்துமுடிப்பது எ.வ.வேலுதான்.


அதனால் ஸ்டாலின், உதயநிதி ஆகிய இரண்டு பேரிடமும் நல்ல பெயர் வாங்கியிருக்கும் வேலு, இப்போது கட்சியில் முக்கியப் பதவி வேண்டும் என்று கேட்டு அடம் பிடிக்கிறாராம். அவர் ஆசைப்படுவது துரைமுருகன் கையில் வைத்திருக்கும் பொருளாளர் பதவிதான்.

ஆனால், பொருளாளர் பதவியை பிடிப்பதற்கு இன்னமும் கொஞ்சகாலம் காத்திருக்க வேண்டும் என்பதால், வேலுக்கு வேறு ஒரு பதவி கொடுப்பதற்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். ஆம், வரும் 6.10.2019 அன்று சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற இருக்கும் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய பதவி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாம்.

தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் பதவி வேலுக்குக் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்தத் தகவல் தெரிந்து தி.மு.க.வின் பல நிர்வாகிகள் கடுப்பின் உச்சத்துக்குப் போயிருக்கிறார்கள். ஏனென்றால் வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட பதவியைக் கொடுத்தால் என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்கிறார்கள்.

தி.மு.க. என்பது ஸ்டாலினின் குடும்பச் சொத்து என்று ஆனபிறகு, பதவிகளை அவர் ஆசைப்பட்டவருக்குக் கொடுக்க உரிமை இருக்கிறதுதானே. போஸ்டர் ஒட்டவும் கொடி கட்டவும் கிளம்புங்க உடன் பிறப்புகளே...