நீண்ட காலமாகவே தி.மு.க.வின் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை சரியில்லாமல் இருந்துவருகிறது.
டி.ஆர் பாலுவுக்கு திமுகவில் புரமோஷன்! இணை பொதுச் செயலாளர் ஆகிறார்!
ஆனாலும், கட்சி உறுப்பினர் நீக்கம், சேர்க்கை போன்ற கட்சி நடவடிக்கைகள் எல்லாமே அவரது பெயரில்தான் வருகிறது.
இந்த விவகாரம் தி.மு.க. மட்டுமின்றி மற்ற கட்சியிலும் பெரும் விமர்சனத்தைக் கொண்டுவந்துள்ளது. யாராவது ஒருவர் பெயரில் அவ்வப்போது தலைமைக்கழகம் அறிக்கை வெளியிடுவது தி.மு.க.வுக்கு புதிது இல்லை என்றாலும், தொடர்ந்து இப்படி செய்வது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறது.
அதனால், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்குப் பதிலாக புதிய நிர்வாகி தேர்வு செய்யவேண்டியது அவசியம் என்று ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார். உடல்நிலை சரியில்லாத நிலையில் க.அன்பழகனின் பதவியை பறிப்பது சரியாக இருக்காது என்பதால், அவருடைய பதவி அப்படியே இருக்குமாம்.
பொதுச்செயலாளர் என்பதற்குப் பதிலாக இணை பொதுச்செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட இருக்கிறதாம். அந்தப் பதவிக்கு கட்சியில் மூத்தவரான டி.ஆர்.பாலு அமர்த்தப்பட இருக்கிறாராம்.
6.10.2019 அன்று நடக்க இருக்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஆக, பாலு பெயரில் இனி அவருக்குத் தெரியாமல் அறிக்கைகள் வரும்.