ஓசி பிரியாணிக் கடைக்கு அடுத்து ஊத்தப்பம் தகராறில் சிக்கிய தி.மு.க. புள்ளிகள். ஸ்டாலின் வேதனை.

பிரியாணிக் கடை, பியூட்டி பார்லர் போன்ற இடங்களில் தகராறு செய்துவந்த தி.மு.க.வினர் இப்போது ஊத்தப்பம் கேட்டு தகராறு செய்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.


மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் ரோட்டில் வில்லேஜ் ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் உள்ளது. இங்கு வந்த தி.மு.க.வை சேர்ந்த ஆறு பேர் ஊத்தாப்பம் கேட்டுள்ளனர். ஊத்தாப்பம் இல்லை என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனாலும், மதுபோதையில் இருந்த தி.மு.க.வினர், ஊத்தப்பம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.  

இதையடுத்து நடந்த வாக்குவாதம் மோதலாக உருமாறவே, ஊழியர்களை தாக்கியதுடன் நில்லாமல் கத்தியால் குத்தவும் முயற்சி செய்துள்ளனர். அதன்பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து சண்டையை விலக்கியுள்ளனர்.

இதுகுறித்து உணவக உரிமையாளர் முகமதுஅசரத் என்பவர், சிசிடிவி பதிவுகளுடன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மயிலாடுதுறை அருகே மாப்படுகை திமுக ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கருப்பையன் மகன் பிரதாப் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்தி, திவாகர், அருண் உள்ளிட்ட ஆறு நபர்கள் என்பது தெரியவந்தது. 

எப்போ பார்த்தாலும் இதுபோன்ற அக்கப்போர்களில் சிக்கி, மானத்தை வாங்குகிறார்களே என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் டென்ஷன் ஆகியுள்ளாராம்.