தென்காசி தொகுதி மக்களவையின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமாரின் சிறிய தகப்பனார் கருப்பையா 2 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பெண்கள் தொடர்பு காரணமாக இருக்கலாம் என்ற புதிய தகவல் போலீசாரின் விசாரணையை மேலும் துரிதப்படுத்தி உள்ளது.
பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி..! கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட திமுக எம்பியின் சித்தப்பா! ராஜபாளையம் திகுதிகு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது தேவதானம் கிராமம். தென்காசி மக்களவை தொகுதி திமுக எம்.பி. தனுஷ்குமாரின் சிறிய தகப்பனாரான கருப்பைய்யா மருத விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தார்.
ரேசன் கடை ஊழியராக பணிபுரிந்து வந்த கருப்பையாவுக்கு, கிராம சமுதாயத் தலைவர் என்ற கூடுதல் பொறுப்பும் உள்ளது. அதே சமயம் ரேசன் கடை எடையாளர்கள் சங்கத்துக்கு தலைவராகவும் பதவி வகித்து வந்தார் சித்தப்பா கருப்பைய்யா.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த புறப்பட்ட கருப்பைய்யா பிரம்மகுளம் என்ற பகுதியில் தனக்கு சொந்தமான வயலை மேற்பார்வையிட சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கருப்பையா வீடு திரும்பாததால் பயந்து போன உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் பிரம்மகுளம் கண்மாய் பகுதியில் கருப்பையா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற உறவனிர்கள் கருப்பைய்யா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.
அதன் பின்ன தகவலறிந்து சென்ற போலீசார் கருப்பையா உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரிடம் சேத்தூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
பிரம்மகுளம் பகுதியில் கடந்த மாதம் கோவில் திருவிழா நடைபெற்றது. இளைஞர்கள் சிலர் குடிபோதையில் தகராறு செய்தனர். அப்போது கிராம மக்கள் உதவியுடன் அவர்களை அடித்து விரட்டினார் கருப்பையா . ஒருவேளை கருப்பையாவால் விரட்டப்பட்ட இளைஞர்கள் ஆத்திரத்தில் அவரை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர்.
அதே வேளையில் கருப்பையா, பெண்கள் விஷயத்திலும் அப்படி இப்படியென இருப்பவர் என கூறப்படுவதால், பெண் தொடர்பால் பாதிக்கப்பட்ட யாரும் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு தற்போது எழுந்துள்ளது.