நம்பிக்கை இல்லா தீர்மானம்! எடப்பாடி வலையில் விழுந்த சீனியர் திமுக எம்எல்ஏக்கள்!

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி திமுக எம்எல்ஏக்களை வைத்தே பலே பிளானை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளார்.


சட்டப்பேரவை கூட்டத் தொடர் விரைவில் கூட உள்ளது. அப்போது சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் சிரமம் இன்றி வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக சின்னத்தில் வென்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரின் ஆதரவு தேவை.

ஆனால் இவர்கள் இருவருமே திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு வார கால பேச்சுவார்த்தையை தொடர்ந்து கருணாஸ் சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களிக்க ஒப்புக் கொண்டதாக சொல்கிறார்கள். இதே போல் தமிமுன் அன்சாரியும் சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக கூறி எடப்பாடி அரசை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இதே போல் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக இருக்கும் மூன்று பேரும் எடப்பாடி அரசை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை. அதே சமயம் திமுக தரப்பில் இரண்டு சீனியர் எம்எல்ஏக்களிடம் எடப்பாடி தரப்பு தொடர்பில் உள்ளதாக சொல்கிறார்கள். நீண்ட காலமாக  எம்எல்ஏக்களாகவே இருக்கும் அந்த இரண்டு எம்எல்ஏக்களும் ஆர்வத்துடன் எடப்பாடி தரப்புடன் பேசுவார்கள் கூறுகிறார்கள்.

திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கூட வர முடியாத நிலையில் தற்போதைய மாவட்டச் செயலாளர்களால் ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ள அந்த எம்எல்ஏக்கள் இருவரும் கட்சியின் சீனியர்கள் என்று கூறுகிறார்கள். இனியும் திமுகவில் அரசியல் செய்ய முடியாது என்கிற நிலையில் உள்ள அவர்கள் எடப்பாடி அரசை காப்பாற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை புறக்கணிக்கும்படி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சொல்கிறார்கள்.