ஆட்சியில் இல்லாத போதே அக்கிரமம்! தொழில் அதிபரிடம் ரூ.1கோடி கேட்டு கட்டப்பஞ்சாயத்து! சிக்கலில் திமுக MLA சேகர்பாபு!

சென்னையில் நகைக் கடை காலி செய்வது தொடர்பான பிரச்சனையில் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர் பாபு மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.


சென்னை சவுகார்பேட்டையில் உள்ளது தங்கசாலை தெரு. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பை ராஜ்குமார் ஜெயின் என்பவர் வாங்கியுள்ளார். அதில் வசித்து வந்த 12 குடும்பங்கள் காலி செய்து விட்ட நிலையில் நகை கடை நடத்தி வந்த கண்பாத்லால் என்பவர் மட்டும் காலி செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான பி.கே சேகர்பாபு இந்த விவகாரத்தில் கண்பாத்லாலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நகை கடை காலி செய்துவிட்டால் தனக்கு இழப்பு ஏற்படும் என்பதால், ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ராஜ்குமார் ஜெயின் என்பவர் புகார் அளித்துள்ளார்.

ஆனாலும் 35 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளதாகவும், மீதம் 65 லட்சம் ரூபாயை கேட்டு மிரட்டுவதாக நீதிமன்றத்தில் ராஜ்குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சேகர்பாபு உட்பட 8 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.