நிறுத்து சபரீசா நிறுத்து! அலறும் ஸ்டாலின்! எகத்தாலமாக சிரிக்கும் டெல்லி!

ஏற்கெனவே வருமான வரித்துறை ரெய்டில் சிக்கி சின்னாபின்னாகிக் கிடந்தாலும் தி.மு.க.வினருக்கு இன்னமும் கொட்டம் அடங்கவில்லை என்றுதான் பா.ஜ.க. தலைமை நினைக்கிறதாம்.


இந்த நிலையில் அமித்ஷாவை சந்தித்துப் பேசும் சபரீசன் திட்டம் பணாலாகி விட்டதாம். தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட்டால், அதன்பிறகு டெல்லிக்குப் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்று, அ.தி.மு.க.வில் இருந்து வந்த சில வி.ஐ.பி.களிடம் ஆள் பிடிக்கும் அசைன்மென்ட் கொடுத்தாராம்.

இந்த விவகாரங்கள் எப்படியோ டெல்லிக்குப் போய், அங்கிருந்து ஸ்டாலின் காதுக்கு வந்திருக்கிறது. இனிமேல் தேவையின்றி எதிர்ப்பலை கிளம்பினால், பயங்கரமான பின்விளைவுகள் இருக்கும் என்று டெல்லி மேலிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாம். இந்த நேரத்தில் இன்னும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ஸ்கெட்ச் போட்டாச்சு என்று சபரீசன் ஸ்டாலினை சந்தித்தாராம்.

அடுத்த எம்.எல்.ஏ. ஒருவரை பிடிக்கும் முன்பு, நம் எம்.எல்.ஏ.க்கள் திடீரென செத்துப் போகிறார்கள். அதனால் இப்போதைக்கு நிலவரம் சரியில்லை, ஒழுங்காக எதிர்க் கட்சி வேலையை மட்டும் பார்ப்போம் என்று மருமகனுக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறாராம். மாமா சொல்வதை மருமகன் கேட்பது கஷ்டம்தான் என்கிறார்கள்.