அவசரப்பட்டு ரஜினியுடன் சேர்ந்துடாதீங்க..! கமலை சந்தித்து ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்! அப்பலோ லீக்ஸ்!

கமல்ஹாசன் காலை உடைத்துக்கொண்டதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை சினிமாவுலகில் சொல்லிவருகிறார்கள். அதை நாம் இங்கே சொன்னால் அடிக்க வருவார்கள் என்பதால் அது வேண்டாம்.


திருமணம், ஆபரேஷன் போன்ற விவகாரங்களை யாருக்கும் தெரியாமலே செய்துகொள்ளும் கமல்ஹாசன், ஏனோ இந்த முறை அனைவருக்கும் முன்கூட்டியே சொல்லிவிட்டு மருத்துவமனைக்குப் போனார். 

கமல்ஹாசன் என்ன காரணத்துக்காக முன்கூட்டியே சொல்லிவிட்டுப் போனாரோ, அதனை நிறைவேற்றும் வகையில் இன்று மருத்துவமனைக்குச் சென்று கமல்ஹாசனை சந்தித்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் சென்றார். மருத்துவமனையில் அவர்கள் அரசியல் பேசவில்லை என்று வழக்கம்போல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கமல்ஹாசனும் ரஜினியும் ஒன்றுசேர வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால், அதனை எப்படியும் உடைக்கவேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் நேரில் சென்று அந்தக் காரியத்தை செய்து முடித்திருக்கிறார் என்கிறார்கள்.

அதேநேரம், கமல்ஹாசன் குடும்பத்தின் புதிய உறுப்பினரான பூஜாகுமாரை ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்.