உதயநிதி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்... டென்ஷனில் தி.மு.க. புள்ளிகள்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வந்ததும் தி.மு.க.வில் என்னவெல்லாம் நடந்தது. எல்லாம் உதயநிதியினால் வந்தது என்று சந்தோஷப்பட்டார்கள். ஆனால், அந்த வெற்றி மமதையில் உதயநிதி என்னவெல்லாம் சொன்னார் தெரியுமா?


இப்போது விக்கிரவாண்டியில் ஜெயிப்பதற்கு வழியைக் காணோம். ஆனால், நாங்குநேரியை எங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் உதயநிதி. அதுமட்டுமின்றி வெற்றிபெற்ற சந்தோஷத்தில், ”சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனித்துதான் போட்டியிட வேண்டும்,” என்றார் -ஸ்டாலினை முன்வைத்துக்கொண்டே. பின்னர் அதனை முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் திருச்சியிலிருந்து வழிமொழிந்தார். 

ஒரு தேர்தலில் வெற்றிபெற்றதுமே இப்படிப் பொறுப்பில்லாமல் துள்ளுவதால்தான் தோல்விகள் தொடர்கின்றன. இப்போது இரு தொகுதிகளையும் அலக்காகத் தூக்கிக்கொடுத்ததற்கு யார் பொறுப்பு?

தேர்தல் வெற்றிக்கு நான் காரணம் என்று முழங்கிய உதயநிதி இப்போது ஏன் காணாமல் போய்விட்டார்? உடனே உதயநிதி மேடைக்கு வரவும் என்று அழைக்கிறார்கள் தி.மு.க. புள்ளிகள். வருவாரா உதயநிதி.