கொல்றாங்களே.. கொல்றாங்களே – அலறும் தி.மு.க. நிர்வாகிகள்

தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னரே உதயநிதியும் கனிமொழியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிகழ்வு, தி.மு.க. நிர்வாகிகளை அலற வைத்துள்ளது. அடுத்து ஸ்டாலினும் களம் இறங்குகிறார் என்றால் எத்தனைதான் செலவழிப்பது என்று கடுப்பாகின்றனர்.


எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ’விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்கிற பிரச்சார நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி தஞ்சை மாவட்டத்திலும், மகளிரணி செயலாளர் கனிமொழி சேலம் மாவட்டத்திலும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட திமுக முன்னணி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

நிகழ்ச்சிகளை குறிப்பாக உதயநிதி நிகழ்ச்சிகளை மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என தலைமையிலிருந்து மாறிமாறி உத்தரவுகள் பறந்து கொண்டிருக்கின்றன. அதேநேரம் செலவுகளுக்காக தம்பிடி காசு கூட தலைமையிலிருந்து வரவில்லை. கொரோனா நிவாரணம் தொடங்கி இப்போதைய விடியலின் குரல் நிகழ்ச்சி வரை இந்த ஆண்டு இதுவரை மட்டும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். மொத்தத்தில் என் கையிலிருந்து மட்டும் 1சி வரை செலவாகியிருக்குது. இது தவிர மற்ற மாவட்ட நிர்வாகிகளும் அவரவர் தகுதிக்கேற்ப செலவழிச்சிருக்காங்க.

 தேர்தலுக்கு இன்னும் முழுசா ஐந்து மாதமிருக்குது. இன்னும் எத்தனையெத்தனை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியிருக்குதோ! இப்பவெல்லாம் தலைமையிலிருந்து போன் வந்தாலே பயமாயிருக்குது. சரி இவ்வளவு செலவு பண்றோமே...சீட்டாவது கேரண்டியா? என்றால் அதுதான் இல்லை. யார் யார் வெளிமாநிலத்துக் காரங்களுக்கு கோடிகோடியா அள்ளிக் கொடுத்து ஆட்களை தேர்வு செய்றாங்களாம். ஆக மொத்தத்தில் உழைக்க ஒரு கூட்டம்; பிழைக்க இன்னொரு கூட்டம் என்கிற நிலையில்தான் எங்க கட்சி இருக்குது என்று புலம்புகிறார்கள்.

அட, பாவம்தான்.