கேளம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் திமுக பிரமுகர் பிறந்த நாளை கொண்டாடிய போது ஏற்பட்ட கைகலப்பில் ஒட்டல் ஜன்னல் கண்ணாடி , நேம் போர்டு வரை திமுகவினர் அடித்து தொம்சம் செய்தனர்....
நட்சத்திர விடுதியில் திமுகவினர் ரகளை! பொருட்களை அடித்து நொறுக்கி வன்முறை! அதிர வைக்கும் காரணம்!

காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும்"சதன்" தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று திமுக பிரமுகர் எக்ஸ்பிரஸ் எல்லையப்பன் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்,மது உட்பட விருந்து தயார் செய்யபட்டிருந்தது. இதில் மது போதையில் சிலர் தகராறில் ஈடுபட்டதில் ஓட்டல் நிர்வாகம் சமரசம் செய்யும் முயற்சி பலனின்றி, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த திமுகவினர், ஓட்டல் ஜன்னல் கண்ணாடி, கதவு மற்றும் நேம் போர்டுகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனைனடுத்து , சதன் ஓட்டல் நிறுவனத்தினர் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் எனவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏற்கனவே பியூட்டி பார்லர், பிரியாணி கடை என தற்போது ஓட்டல் வரை திமுகவினர் கைவரிசையை காட்டிவருகின்றனர்.