ஸ்டாலின் கட்டுரையைப் பார்த்து சிரிக்கும் தி.மு.க.வினர்! என்ன சின்னப்பிள்ளைத்தனம்?

முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குண்டக்கமண்டக்க இருக்கிறது என்று ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.


இதுதான் அந்த அறிக்கை. கடந்த முறை முத்தலாக் மசோதாவை “இது பா.ஜ.க.வின் கம்யூனல் அஜெண்டா” என்று தாக்கினார் அதிமுகவின் பாரளுமன்ற உறுப்பினர் திரு அன்வர் ராஜா. ஆனால் இன்றைக்கு தன் பதவியைத் தக்க வைக்க திரு பழனிச்சாமியும், தனது மகனுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி பெற திரு ஓ. பன்னீர்செல்வமும் அதிமுகவையும்- அதிமுக அரசையும் பா.ஜ.க.விடம் குத்தகைக்கு விட்டு விட, பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவை ஆதரித்திருக்கிறது அ.தி.மு.க.

அதே போல, மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவிற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு அந்த மசோதாவிற்கும் பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுக. அது மட்டுமா?மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் பெறும் சட்ட திருத்த மசோதாவிற்கும் மனப்பூர்வமாக ஆதரவாம். பா.ஜ.க.வின் மறு பதிப்பாகவே அதிமுக மாறியிருக்கிறது.

சிறுபான்மையினர் நலன், மாநிலத்தின் உரிமைகள் என எல்லாவற்றையும் விட்டு விட்டு, "பா.ஜ.க.- ஆர்எஸ்எஸ் கொள்கையே எங்கள் கொள்கை” என்று செயல்படுவதற்கு மறைந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய “அதிமுக” என்ற பெயர் எதற்கு?

தமிழகத்தில் ஒரு நாக்காகவும், பாராளுமன்றத்தில் இன்னொரு நாக்காகவும் செயல்பட்டு, தமிழக மக்களை ஏமாற்றும் இந்த இரட்டையரின் கபட வேடங்களைப் பார்த்தால் “இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்று, எம்ஜிஆர் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

அறிக்கை நல்லாத்தான் இருக்கு, நாம சரியா இருக்கிறோமா என்று தி.மு.க.வினரே இந்த அறிக்கையைப் பார்த்து சிரிக்கிறார்கள். ஏனென்றால், என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்த்து நாடாளுமன்ற மக்களவையில் பேசியது தி.மு.க., ஆனால், அதுவே ஓட்டெடுப்புக்கு வந்தபோது ஆதரித்து ஓட்டு போட்டது.

அதேபோல், நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் எங்கெல்லாம் இடம் கிடைக்குமோ, அதில் எல்லாம் இடம் பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வை தாஜா செய்து வருகிறார்கள். இப்படி பா.ஜ.க.வுக்கு ஜால்ரா போடும் தி.மு.க. இதுகுறித்துப் பேசலாமா என்று கேட்கிறார்கள்.

நியாயமான கேள்விதான். சொல்லுங்க ஸ்டாலின்... பதில் சொல்லுங்க.