வருங்கால தி.மு.க. தலைவர் இன்பநிதிக்குப் பிறந்த நாளாம்… வெட்கமில்லாமல் வாழ்த்தும் தி.மு.க. புள்ளிகள்… இதுதான் கொத்தடிமைக் கூட்டமா..?

இன்று உதயநிதியின் மகன் இன்பநிதியின் பிறந்த நாளாம். அதற்காக உதயநிதி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அம்புட்டுத்தான் வாரி அடித்துக்கொண்டு, அத்தனை தி.மு.க.வினரும் இன்பநிதிக்கு வாழ்த்து வழங்கி போஸ்ட் போட்டிருக்கிறார்கள்.


என்ன இருந்தாலும் நாளைக்கு உதயநிதிக்குப் பிறகு இன்பநிதிதானே தி.மு.க.வுக்கு தலைவராக வரப்போகிறவர். இப்போதே அவருக்கு வாழ்த்து சொல்லிவைத்தால், பின்னர் பயன்படும் என்ற ரீதியில் பலரும் வாழ்த்துக்களை கூறி இருக்கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு அடிமையாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்று அவ்வப்போது வீராவேசம் பேசுகிறது தி.மு.க. கூடாரம். ஆனால், பா.ஜ.க.வை ஓடஓட விரட்டுவது போன்று வேல் பூஜைக்கு அனுமதி மறுத்து, சூரப்பாவுக்கு எதிர்ப்பு காட்டி கெத்து காட்டி வருகிறது அ.தி.மு.க. தலைமை.

ஆனால், தி.மு.க.வில் இப்போது உதயநிதியைத் தாண்டி, அவர் மகன் இன்பநிதிக்கும் வாழ்த்து கூறிக்கொண்டு இருக்கிறார்கள். சபாஷ் கொத்தடிமைகளே…