போட்டுக் கொடுத்த திமுக பிரமுகர்! மூட்டை மூட்டையாக சிக்கிய பணம்! துரைமுருகன் மாட்டியதன் பரபரப்பு பின்னணி!

திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு துரைமுருகனின் காட்பாடி இல்லத்திற்கு வருமான வரித்துறையினர் திடீரென சென்றனர். ஆனால் வீட்டில் சோதனை செய்வதற்கான உத்தரவு இல்லை என்று கூறி வருமான வரித்துறையினர் திமுக வழக்கறிஞர் அணி திருப்பி அனுப்பியது.

இதன்பிறகு துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்துவதற்கான உத்தரவு கடிதத்தை பெறுவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி தான் துரைமுருகன் தனது kingston கல்லூரியில் வைத்திருந்த பணத்தை உடனடியாக இடம் மாற்றியதாக கூறுகிறார்கள்.

சோதனைக்கான அனுமதி கடிதத்துடன் வந்த அதிகாரிகள் நேராக கல்லூரிக்கு சென்றபோது அங்கு பணம் இல்லை. kingston கல்லூரியில் பணம் இருக்கிறது என்று நம்பத் தகுந்த இடத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் தகவலின் அடிப்படையில் பணம் இல்லை என்பதால் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் வருமான வரித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு kingston கல்லூரியிலிருந்து திமுகவின் விவசாய அணியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் அது காட்பாடி குடோனுக்கு பணம் சென்றுள்ளதாக தகவல் அளித்துவிட்டு முகவரியையும் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். 

இதன் பிறகு இன்று காலை அதிரடியாக தேர்தல் பறக்கும் படையினர் உடன் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சீனிவாசனின் குடோனில் இருந்து கட்டுக்கட்டாக பெட்டி பெட்டியாக மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் துரைமுருகனை எதிர்த்து அரசியல் செய்யும் ஒரு பிரமுகர் தான் இந்த விவகாரத்தில் அவரை சிக்க வைத்ததாகவும் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது.

இதனை அறிந்து துரைமுருகன் கடும் கோபத்தில் இருப்பதாகவும் விரைவில் அந்த நிர்வாகிக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.