ரூ.100 கோடி புகார்! போயஸ் கார்டன் திமுக பிரமுகரை தூக்கியது போலீஸ்!

அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், 100 கோடி வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி, கட்டுமான நிறுவன அதிபரை ஏமாற்றி பணம் பறிப்பு சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.


 சென்னையில் உள்ள வில்லிவாக்கம் வசித்து வருகிறார். இவருக்கு போயஸ் கார்டனில் அலுவலகம் உள்ளது. இவர் தனது முத்துவேல் என்ற பெயரை லயன் முத்துவேல் என பெயர் மாற்றி, இந்த மாதரி பண மோசாடியில் இடுப்பட்டுள்ளார். மேலும், முத்துவேல் அரசியல் கட்சி ஒன்றின் பகுதி அமைப்பாளர் பொறுப்பு வகிக்கின்றார்.

இதற்கிடையே, முத்துவேல் போயஸ் கார்டனில் அலுவலகத்தில் பல கட்டப் பஞ்சாயத்து மூலம் கோடி கணக்கில் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது என்பது புகாரின் அடைப்படையில் தெரியவந்துள்ளது. 

இது மட்டுமின்றி இவருக்கு சொந்தமான போயஸ் கார்டன் அலுவலகத்தில் பாபா எண்டர்பிரைசஸ், முத்துவேல் எண்டர்பிரைசஸ், வாராகி எண்டர்பிரைசஸ் என பல போலி பெயர்களில் நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்துள்ளார். இந்த போலி நிறுவனங்களுக்கு, உறுதுணையாக இருந்த இரண்டு தரகர்கள் இந்த வழக்கில் கைது செயப்பட்டுள்ளனர்.

காவல் துறையினர் விசாரணையில் இவர்களின் முக்கிய நோக்கம், கோடிக்கணக்கில் பணத்தேவை உள்ள அதிபரை அணுகி அவர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் ஆவணங்கள் இல்லாமலும் பல கோடி வரையில் கடன் வாங்கித் தருவதாக கூறி பலரையும் ஏமாற்றி, முத்துவேலிடம் அழைத்து சென்று கமிஷன் பெற்றுகொள்வது அவர்களது வழக்கம்.T

இந்த நிலையில், சென்னையில் தொழிலை தொடங்குவதற்கு ராஜஸ்தானை சேர்ந்த நிக்கில் கண்ணா என்பர் தனது கட்டுமான நிறுவனத்திற்கு வங்கி கடன் பெற முயன்று உள்ளார். இந்த தகவலை அறிந்த முத்துவேல் தரகர்கள் அதிபர் நிக்கில் கண்ணாவை முத்துவேலின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் முத்துவேலின் போயஸ் தோட்டத்தில் அலுவலகத்தில் சென்று தொழிலதிபர் நிகில் கண்ணா, முத்துவேலிடம் பேசியவுடன் தான் கேட்கும் 100 கோடி கடனை பெற்று தருவார் என நம்பியுள்ளார்.

இதற்கிடையே, முத்துவேல் சில ஆவணங்களை போலியாக காண்பித்து வங்கி கடன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறி, அதற்கான கமிஷன் தொகையாக 2.62 கோடியை பெற்றுக் கொண்டு பணம் மோசடி செய்துள்ளார்

பின்னர், தொழிலதிபர் நிகில் கண்ணாவிற்கு வங்கி கடன் கிடைக்காததால் முத்துவேலிடம் கொடுத்த கமிஷன் பணத்தை திருப்பிக் கேட்டுயுள்ளார். ஆனால் அதற்கு எல்லாம் முத்துவேல் செவிசாய்க்கவில்லை, மேலும், தனது அடியாட்கள் மூலம் தொழிலதிபர் நிக்கில் கண்ணாவை, மிரட்டியுள்ளார். 

மன உளைச்சலுக்கு ஆளான நிக்கில் கண்ணா மத்திய குற்றப்பிரிவில் வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளார். பின்னர் காவல் துறை நடைவடிக்கையினால் தற்போது முத்துவேலை கைது செய்து குற்றப்பிரிவில் வழக்கில் விசாரணையில் ஈட்டுப்பட்டு வருகிறார்கள் காவல் துறையினர்.