முதன்முறையாக தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார் கனிமொழி.
கனிமொழிக்காக களம் இறங்கிய ராஜாத்தி! காரணம் கேட்டா கடுப்பாயிடுவீங்க!
இதுவரை ராஜ்யசபா எம்.பி. என்று காலம் தள்ளிவந்தார். இனிமேல் ஸ்டாலின் ராஜ்யசபா பதவி வாங்கித் தருவார் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் தூத்துக்குடியில் களம் இறங்க முடிவு செய்தார். அதற்காக கடந்த இரண்டு வருடங்களாகவே களப்பணி செய்துவந்தார்.
தன்னுடைய எம்.பி. தொகுதி நிதியில் பெரும்பாலும் தூத்துக்குடி பகுதிக்கே செலவழித்தார். மேலும் பல்வேறு நபர்களின் நிதியையும் இந்தப் பக்கம் திருப்பிவிட்டு ஏரியாவில் ஓரளவு நல்லபெயர் வாங்கிவிட்டார். அவர் ஆசைப்பட்ட படியே ஸ்டாலினும் தொகுதியை கனிமொழிக்குக் கொடுத்துவிட்டார்.
அவருக்கு எதிராக தமிழிசை நிற்பதால், இப்போதே வெற்றி வேட்பாளர் என்ற நிலைக்கு வந்துவிட்டார் கனிமொழி. இந்த நேரத்தில்தான் கனிமொழியின் தாயாரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் துணைவியாருமான ராஜாத்தி அம்மாள் கனிமொழிக்காக தூத்துக்குடி வந்திருக்கிறார்.
முதலில் கனிமொழி வெற்றிக்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு சண்முகார்ச்சனை செய்து வழிபாடு செய்தார். அதன்பிறகு கனிமொழிக்காக சில முக்கிய நபர்களை சந்தித்து ஆதரவு திரட்ட இருப்பதாக சொல்லப்பட்டது.
எதற்காக முக்கிய நபர்களை சந்தித்து ஆதரவு என்று கேள்வி எழுப்பியபோதுதான், தி.மு.க. பிரமுகர் ஒருவர் உண்மையைப் போட்டு உடைத்தார். தொகுதிக்குள் இருக்கும் முக்கியப் பிரமுகர்களிடம் தேர்தல் நிதி வசூலிக்க வந்திருக்கிறாராம் ராஜாத்தி. மாவட்டச் செயலாளர்கள் நிதி கேட்டபோது, நேரடியாக ஸ்டாலினிடம் கொடுத்துவிடுகிறேன் என்று எஸ்கேப் ஆகிறார்களாம்.
ஸ்டாலின் வசம் போகும் நிதி நம் கைக்கு வராது என்பதால், ராஜாத்தி நேரடியாக தொழிலதிபர்களை சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கிறாராம். சரிதான், தாய் மகளுக்காற்றும் உதவி.