கனிமொழி மாமியார் மரணம்! ஆஸ்திரியாவுக்குப் போகிறாரா கனிமொழி?

தூத்துக்குடி எம்.பி.யாக இருக்கும் கனிமொழியின் மாமியாரும், அரவிந்தனின் தாயாருமான சுசிலா கோவிந்தசாமி இன்று மரணத்தைத் தழுவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியன்று அரவிந்தனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆதித்யா என்ற மகன் இருக்கிறார். பிரபல தொழிலதிபரான அரவிந்தன், பல்வேறு நாடுகளில் தொழில் தொடங்கி நடத்தி வருபவர்.

அந்த வகையில் இப்போது ஆஸ்திரியாவில் அரவிந்தனின் பெற்றோர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக அரவிந்தனின் தாயான சுசிலா கோவிந்தசாமி மரணம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

இன்று தூத்துக்குடி நிகழ்ச்சிக்கு வந்த கனிமொழிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரியா செல்லும் பணியில் கனிமொழி இறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.